பகல் வேடங்கள்... - முத்தையா மோகன்
13 Jun 2026, 7:33 pm

பகல் வேடங்கள்... - முத்தையா மோகன்

நேற்று பேசிக் கொண்டிருந்த ஒன்று இன்று காணாமல் போன நிலையில் இன்று பேசுவதற்கு மற்றொன்று...

நாளை பேசிக்கொண்டிருக்க வேறொன்று மறுநாள் மறக்கடிக்கப்படுவதற்காகவே புதிதாய் மூளைக்குள் விஷம் ஏற்றப்படும்...

ஏ ஐ வரவு எதையும் மாற்றிப்பேச வைக்கும் சுய புத்தி ஏன் எதற்கென்று கேட்காமலேயே தரமற்று வாழ்வின் தரவை சீர்குலைக்கும்...

உழைப்பை பேணாது பேதலிக்கும் மனநிலைகள் கலைப்பை போக்கிக்கொள்ள கண்டதைசெய்யும் வரலாற்றை திரித்து பேசி திமிர் பண்ணும்...

கொள்கை மாறி மாறி தனது குடிகள் காக்க நம்பிய மக்களை நட்டாற்றில் விடும் பக்குவம் அற்று பகல் வேடங்கள் கட்டும்...