பத்மநாபபுரம் எம்எல்ஏ அலுவலகம்; க. கனகராஜ் திறந்து வைத்தார்!
11 Jun 2026, 9:07 pm

பத்மநாபபுரம் எம்எல்ஏ அலுவலகம்; க. கனகராஜ் திறந்து வைத்தார்!

நாகர்கோவில், ஜூன் 11 - புலியூர்குறிச்சியில் பத்ம நாபபுரம் எம்எல்ஏ அலுவல கத்தை சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வியாழனன்று திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட் டம், புலியூர்குறிச்சியில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலு வலகத் திறப்பு விழா சட்ட மன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி தலைமையில் வியாழக்கிழமை (ஜுன் 11) அன்று நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் க. கனக ராஜ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமா றோஸ், திமுக மேற்கு மாவட்ட துணைச்செய லாளர் ராஜூ, திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஜான்சன், காங்கிரஸ் நிர்வாகி சுந்தர்சிங், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மேசியா, எஸ்டிபிஐ மாவட்ட நிர்வாகி சுல்பிகர், சிபிஎம் மூத்த தலைவர் எஸ். நூர்முகமது, சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.