தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சியில் ஆர். செல்லசுவாமி எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு

28 May 2026, 11:45 pm
பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சியில் ஆர். செல்லசுவாமி எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு
<p><strong>பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சியில் ஆர். செல்லசுவாமி எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு</strong></p><p>நாகர்கோவில்,மே.28- கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட முத்தல குறிச்சியில் ஆர்.செல்ல சுவாமி எம் எல் ஏ வுக்கு இனிப்புகள் வழங்கியும், கிரீடம் சூடியும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். ஆர்.செல்லசுவாமி எம் எல் ஏ பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வாகனத்தில் சென்று வீடு வீடாக நன்றி தெரிவித்தார். அதேபோல் கூட்டணி கட்சியினருக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து வந்தார். அப்போது பல பகுதிகளில் பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் ஆரவாரத்துடன் பெரும் வரவேற்பு கொடுத்தனர். சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் குடும்பத்தினர் உடன் வந்து வரவேற்றனர். இதில் இளைஞர்கள் இளம் பெண்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் தங்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். அதைப்போல் முத்தல குறிச்சி பகுதியில் பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி வரவேற்றனர் முத்தலக்குறிச்சி பகுதியில் கூட்டணி கட்சியை சேர்ந்த செல்வின், ஆஸ்டின், ஜெபாஸ்டின், ராஜேந்திர ராஜ், வேல் தாஸ் மற்றும் சோபித ராஜ், ஆலன் கலந்துகொண்டு கிரீடம் மற்றும் சந்தன மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.