தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் 14 மருத்துவர்கள் குறைப்புக்கு மக்கள் எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிப்பு

1 Oct 2026, 9:17 pm
பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில்  14 மருத்துவர்கள் குறைப்புக்கு மக்கள் எதிர்ப்பு  மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிப்பு
<p><strong>பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் 14 மருத்துவர்கள் குறைப்புக்கு மக்கள் எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிப்பு</strong></p><p> நாகர்கோவில், அக். 1-தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள 35 </p><p>மருத்துவர் பணியிடங்களை 21 ஆக குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் ஞா. அருள்சோபன் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தென் திருவிதாங்கோடு சமஸ்தானம் இணைத்திருந்த காலக்கட்டத்தில் நிறுவப்பட்டுசெயல்பட்டு வருகிறது .தற்போது இந்த மருத்துவமனை மாவட்டத்தின் எல்லை பகுதிகளிலான பேச்சிப்பாறை, கோதையாறு. களியக்காவிளை, கருங்கல்உள்ளிட்ட மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயன்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஏற்கனவே உள்நோளிகளுக்கு படுக்கை வசதி 200 ஆக உயர்த்தவும் சிறப்பு பிரிவு மருத்துவர்களை நியமிக்கவும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது .தற்போது இந்தமருத்துவமனையில் மருத்துவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது இருந்த போதிலும் சிகிச்சை கிடைப்பதில்காலதாமதம் ஏற்படுகிறது.மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த பிற பணிகளுக்கு செல்லும் போது இங்கு சிகிச்சை கிடைப்பதில் கால தாலதம் ஏற்படுகிறது. தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்ட இந்த மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உரிய மருத்துவர்களின் எண்ணிக்கை ஒதுக்கப்படாமல் குறைந்த பட்ச மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந் நிலையில் மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இந்த நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.