முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் ஆர்.செல்லசுவாமிக்கு வரவேற்பு

5 May 2026, 11:05 pm
பத்மநாபபுரம்  தொகுதியில் வெற்றி பெற்ற   தோழர் ஆர்.செல்லசுவாமிக்கு வரவேற்பு

பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் ஆர்.செல்லசுவாமிக்கு வரவேற்பு

​​​​​​​குழித்துறை,மே 5- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்ல சுவாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மார்த்தாண் டம் வட்டாரக்குழு சார்பில் வெட்டு வெந்நி பகுதியில் மாபெரும் வரவேற்பு அளிக் கப்பட்டது. ஊர்வலமாக சென்று விடுதலைப்போராட்ட வீரர்க ளும் கட்சியின் மூத்த தலை வர்களுமான தோழர்கள் ஜி.எஸ்.மணி , டி.மணி ஆகி யோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் , மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அனந்த சேகர் , அண்ணாதுரை, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மோகன் குமார், ஜூலியட்மெர்லின் ரூத், வட்டாரச் செயலாளர் சர்தார் ஷா, நகர்மன்ற உறுப்பினர்கள் , வட்டார உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram