தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் நீதிமன்ற வாயில் முன்பு பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு நீதிமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

27 Oct 2026, 9:16 pm
பத்மநாபபுரம் நீதிமன்ற வாயில் முன்பு பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு நீதிமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

பத்மநாபபுரம் நீதிமன்ற வாயில் முன்பு பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு நீதிமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், அக்.27-கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த பெண்ணை வெட்டிக் கொல்ல கணவன் முன்றுள்ளார். தடுக்க முயன்ற வழக்கறி ஞர்களையும் வெட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாலவிளாகத்தை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ் (40). இவரது மனைவி ஜெர்லின் பிரேமா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். ஜெர்லின் பிரேமா விவாகரத்து கோரிய வழக்கு பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 27 செவ்வாயன்று விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்துக்கு ஜெர்லின் பிரேமா வந்துள்ளார்.

நீதிமன்ற நுழைவு வாயிலில் அவரது கணவர் வின்சென்ட் ராஜ் வழிமறித்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து வின்சென்ட் ராஜ் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களையும் வெட்ட முயன்றுள்ளார். பின்னர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து தக்கலை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வின்சென்ட் ராஜ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த ஜெர்லின் பிரேமாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இதுவரையும் நிறைவேற்றப்படாத நிலையில், நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை கூட அவமதிக்கும் விதத்தில் போலீசார் செயல்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ் கண்ணன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வாயில்களிலும், நீதிபதிகள் குடியிருப்பிலும் ஆயுதம் ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும் என 2024 டிசம்பர் 20 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2025 ஜனவரியில் கூட, குடும்ப நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் பைகளை சோதனை செய்யவும், உள்ளே வருபவர்களை சோதிக்கவும், சாதாரண உடையில் போலீசாரை நியமிக்கவும், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் இன்று வரை முழுமையாக நடை முறைப்படு த்தப்படவில்லை. அதன் விளைவு தான் இன்று நீதிமன்ற வாயிலிலேயே பெண் வெட்டப்பட்ட கொடிய சம்பவம் நடந்துள்ளது. எனவே, நீதிமன்ற பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இச்சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.