மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு
9 Apr 2026, 5:30 am

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு

நாகர்கோவில், ஏப். 8- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிக்குழு அலுவலகம் அழகிய மண்டபத்தில் புதனன்று திறக்கப்பட்டது. திமுக குமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக பால் வளத்துறை அமைச்சருமான த. மனோ தங்கராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். செல்ல சுவாமி போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் அழகிய மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டு புதனன்று முதல் செயல்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் த. மனோ தங்கராஜ் பேசியதாவது: கடந்த தேர்தலை விட கூடுதலாக 10 சதவீத வாக்குகளை நாம் பெற வேண்டும். அதற்கு கூட்டணி கட்சிகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். தமிழக அரசு இதுவரை செய்த நலத்திட்டங்கள் குறித்தும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது குறித்தும் பயனுள்ளவாக்கு சேகரிக்க செல்பவர்களிடம் தருகிறோம்.

வாக்கு சேகரிக்க செல்பவர்கள் பாகுபாடு இன்றி அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரியுங்கள். நமது வேட்பாளர் ஆர். செல்ல சுவாமியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு கடுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.