தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்கு கேட்டு பிரச்சார சுற்றுப் பயணம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

11 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்கு கேட்டு பிரச்சார சுற்றுப் பயணம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்கு கேட்டு பிரச்சார சுற்றுப் பயணம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் ஏப். 10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிப் போட்டியில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரிக்கும் வாகன சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 10 வெள்ளியன்று தொடங்கினார். வேர்க்கிளம்பியில் இருந்து கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து திமுக குமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

வேர்க்கிளம்பியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஆர்.செல்லசுவாமி பயணத்தை தொடங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் புஷ்பலீலா ஆல்பன், ஆர்.லீமாரோஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேரிபா, தேமுதிக மாவட்ட செயலாளர் கனகப்பன், எஸ்பிஐயு மாவட்டச் செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

புவன்கோடு, கல்லங்குழி, மணலிக்கரை, சிதறால்கோடு, செங்கோடி, தச்சூர், அருவிக்கரை, தானிவிளை, மாத்தூர், மலையடி, புலியூர் குறிச்சி சில இடங்களில் கருப்பம்பாறை, கீழ்குளம், பத்மநாபபுரம் பேரூராட்சி, ஆற்றுர், திருவட்டார், மணலி, தக்கலை அரசு மருத்துவமனை பகுதி, பீர்ப்பா பகுதி, ஐந்து வண்ணம் தெரு, மக்காய்பாளையம் பள்ளி, மேட்டுக்கடை ஆகிய பகுதிகளிலும் ஆர்.செல்லசுவாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

இரவில் இராமன் பறம்பு, பழைய பேருந்து நிலையம், கொல்லன்விளை, அண்ணாசிலை வழியாக தக்கலை புதிய பேருந்து நிலையத்தின் நிறைவு செய்தார். வேட்பாளருடன் திமுக வேர்க்கிளம்பி பேரூர் செயலாளர் செல்லகுமார், காங்கிரஸ் கட்சியின் பேரூர் தலைவர் கதிர் ஜெயக்குமார், அயக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் பி.டி.செல்லப்பா, திமுக திருவட்டார் ஒன்றிய துணை தலைவர் எஸ்.காந்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, ஆர்.ரவி, குலசேகரம் வட்டாரச் செயலாளர் சவுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர் சகாய ஆன்டனி, தக்கலை வட்டாரச் செயலாளர் கஜேந்திராயின் உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.