திருநெல்வேலி விரைவு செய்திகள்
3 Jun 2026, 10:22 pm

திருந்திய நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் போட்டி பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

நாகர்கோவில், ஜுன் 3- திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு “ சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான“ விருது சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கு பெற குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும். குத்தகைதாரர்க ளும் கலந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட சன்ன நெல் இரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவுக்கட்டணம் ரூ.150 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவ ணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் நிலவரைபடம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

குமரியில் விளைநிலம் காப்போம் விழிப்புணர்வு இயக்கம் ஜுன் 30 வரை நடைபெறுகிறது

நாகர்கோவில், ஜுன் 3- இந்திய ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வழிகாட்டுதலின்படி, “விளைநிலம் காப்போம் இயக்கம் (Khet Bachao Abhiyan) ஜுன் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் சிறப்பு இயக்கமாக நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உழவர் கூட்டங்கள், களச் செயல்விளக்கங்கள் மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பான பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. இயற்கை வேளாண்மை மற்றும் நிலையான வேளாண்மை முறைகளை ஊக்குவித்தல், மண் ஆரோக்கியத்தை பாதுகாத்து மேம்படுத்துதல், மண் பரிசோதனை அடிப்படையிலான சத்து நிர்வாகத்தை கடைப்பிடித்தல், சமச்சீரான மற்றும் சிக்கனமான உரப் பயன்பாட்டை உறுதி செய்தல், உயிர் உரங்கள், நானோ உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்தல், பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் உரமிடும் முறைகளை ஊக்குவித்தல், அதிகப்படியான உரப் பயன்பாடு, பதுக்கல் மற்றும் தவறான பயன்பாட்டை தடுத்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமைக்கும் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இதன் முக்கிய நோக்கங்களாகும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது விளை நிலங்களில் குறைந்தது 25 சதவீத பரப்பளவில் இயற்கை வேளாண்மை முறைகளை பின்பற்ற முன்வரு மாறு ஊக்குவிக்கப்படுவார்கள். இவ்வியக்கத்தின் மூலம் விவசாயிகளின் சாகுபடி செலவினங்களை குறைப்பதுடன், மண் வளத்தை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க முடியும். எனவே, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வியக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்று, நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.