தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாட்டப்பத்து பகுதியில் நெல் விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் செயல் விளக்கம்

23 Jul 2026, 10:46 pm
பாட்டப்பத்து பகுதியில்  நெல் விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் செயல் விளக்கம்
<p><strong>பாட்டப்பத்து பகுதியில் நெல் விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் செயல் விளக்கம் </strong></p><p>தென்காசி, ஜூலை 23 - தென்காசி வட்டாரம், பாட்டப்பத்து கிராமத்தில் நெல் விதை நேர்த்தி மற்றும் நாற்று வேர் நனைத்தல் செயல் விளக்கம் நடைபெற்றது. கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின், கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக் கலைப் பள்ளி வேளாண் மைத் துறை மாணவர்கள், கிராமப்புற வேளாண் அனு பவத் திட்டத்தின் கீழ், தென்காசி வட்டாரம், பாட்டப் பத்து கிராமத்தில் நெல் விதை நேர்த்தி மற்றும் நாற்று வேர் நனைத்தல் குறித்த செயல் விளக்கப் பயிற்சியை நடத்தி னர். இந்நிகழ்ச்சி உதவி வேளாண்மை இயக்குநர் திரு மலைசாமி தலைமையிலும், பாட ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு வழிகாட்டி முனைவர் மு.ஜெயந்தி வழிகாட்டுத லின் படியும் நடைபெற்றது. அசோஸ்பிரில்லம் உயிர் உரத்தைப் பயன்படுத்தி விதை நேர்த்தி மற்றும் நாற்று வேர் நனைத்தல் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இதன் மூலம் வேர்வளர்ச்சி மேம்படுதல், வளிமண்டல நைட்ரஜன் நிலைப்படுத்துதல், நாற்று நடவு அதிர்ச்சியைக் குறைத் தல், ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனை அதிகரித்தல் மற்றும் மகசூலை உயர்த்துதல் போன்ற நன்மைகள் குறித்து விவ சாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்னிலையில் செயல்விளக்கம் நடத்தப்பட்டதுடன், மாணவர்கள் நெல் நாற்று நடவு பணியிலும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அபினா சி.தாஸ், அபிநிஷா, க.ஹர்ஷினி த.மான்சிகா மற்றும் மனிஷா ஆகிய வேளாண்மைத் துறை மாணவி கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.