கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
10 Mar 2026, 3:51 pm

இன்று முதல் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும்!

தருமபுரி, மார்ச் 10- அரூரில் நிகழாண்டுக்கான நேரடி நெல் கொள் முதல் நிலையம் புதனன்று (இன்று) முதல் செயல் படவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் விவசாயி களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, புதனன்று (இன்று) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்ட டத்தில் இந்த மையங்கள் செயல்படும். சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி.) ரூ.2,545, பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கி) ரூ.2,500-க்கு கொள் முதல் செய்யப்படும். விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா நகல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஏஏபி சான்றை கொண்டு வந்து, இடிபிசி மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் ஆதார் எண்ணு டன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் ரேகை பதிவு மூலம் தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ் வாறு பெருவிரல் ரேகை மூலம் பதிவுசெய்ய இயலாத பட்சத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் மூலம் பெறப்பட்ட கடவுச்சொல் (OTP) மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம். கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நெல் தர திரிபுகளுக்கு உள்பட்ட தாக இருக்க வேண்டும். நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத் தப்படும். எனவே, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல்லுக்கு அரசு நிர்ண யம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் நிலவும் வறட்சி: அணைக்கு வரும் வனவிலங்குகள்

ஈரோடு, மார்ச் 10- வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், பர்கூர் மலையடிவாரத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர், பர்கூர், தட்டக் கரை, சென்னம்பட்டி வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை உள் ளிட்ட வனவிலங்கள் காணப்படுகின்றன. கோடைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், தற்போதே கடுமை யான வெயில் காணப்படுவால், வனப்பகுதியில் உள்ள குட்டைகள், நீரோடைகள் வறண்டு காணப்படுகின் றன. செடி, கொடிகளும் காய்ந்துள்ளன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வன எல்லையை ஒட்டி யுள்ள கிராமங்களில், யானை உள்ளிட்ட வன விலங்கு கள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரு கின்றன. மேலும், பர்கூர் மலையடிவாரத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீரை தேடி வன விலங்குகள் வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலை யில், அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திங்களன்று சென்ற போது, குட்டிகளுடன் கூட்டமாக வந்த 10க்கும் மேற்பட்ட யானைகள், தண்ணீரை அருந்தியும், நீந்தி யும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருந்த யானைகள், மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன.

தன்பாத் அமிர்த பாரத் ரயில்

சேவை சேலம், மார்ச் 10- கோவை மாவட்டம், போத்தனூர் - ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இடையே புதிய ’அமிர்த பாரத்’ வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே வாரி யம் அறிமுகம் செய்துள் ளது. இதன் தொடக்க விழா சிறப்பு ரயிலை (வண்டி எண்: 06619) பிரதமர் நரேந் திர மோடி புதனன்று (இன்று) காணொலிக் காட்சி வாயி லாக தொடங்கி வைக்கி றார். இந்த சிறப்பு ரயில் புத னன்று மாலை 5.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப் பட்டு கோவை சந்திப்பு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், ராயகடா, சம்பல்பூர், ரூர்கேலா, ராஞ்சி வழியாக மார்ச் 13 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தன் பாத் சென்றடையும். இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டி கள் இணைக்கப்பட்டுள்ளன.

செவிலியர் பணியிடை நீக்கம்

கோவை, மார்ச் 10- சுகாதார நிலைய கட்டிடத்தை விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட் டார். கோவை, வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், தற்போது துணை சுகா தார நிலையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு நகர்ப்புற சுகாதார செவிலியராகப் பணியாற்றி வந்த கனிதா, அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக ஒரு அறையை ஆக்கிரமித்து தனது குடியிருப்பிற்காகப் பயன்ப டுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கனிதாவும், அவரது கணவர் ஷியாம் சுந்தரும் வீட்டு உபயோகப் பொருட்களை அடுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத் துறை, கடந்த பிப்ரவரி மாதம் வடவள்ளியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பழைய கட்டிடம் துணை நிலையமாக செயல்பட்டு வருவ தாகக் குறிப்பிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட செவிலி யர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, இது சம்பந்தமாக மாநகர சுகாதார அலுவலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சிகிச்சை பெறும் பகுதிக்கும், குடி யிருப்பு பகுதிக்கும் இடையே தடுப்புச் சுவர் எழுப்பவும், குடி யிருப்புக்கு தனி வாசல் அமைக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

உதகை, மார்ச் 10- சின்னகாடிமந்து பகுதியில் அறு வடைக்கு தயாராக உள்ள பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்னகாடிமந்து பகுதியில் 20க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்ற னர். இதனிடையே, இப்பகுதியில் இரு யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் யானைகள், விவசாய நிலங்க ளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பயிர்களை யானை கள் சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ் டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறை யினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து, வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.