தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிட்வா புயலால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும்! அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!

3 Dec 2025, 2:59 pm
டிட்வா புயலால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 35,000  இழப்பீடு வழங்க வேண்டும்! அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!
<p><strong>டிட்வா புயலால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 35,000 &nbsp;இழப்பீடு வழங்க வேண்டும்! அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!</strong></p> <p>புதுக்கோட்டை, டிச. 3 - டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு: 3 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் 3 லட்சம் ஏக்கர் அளவிற்கு பாதிப்பைச் சந்தித்து இருப்பதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களிலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. &nbsp;தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் கூட தேங்கியுள்ள தண்ணீர் முற்றிலும் வடிவதற்கு ஒரு வார காலம் ஆகும். ஏற்கெனவே குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டபோது பெய்த தொடர் மழையின் காரணமாக நெல் முளைத்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. &nbsp;நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்! எனவே, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும். டிட்வா புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 8000 ரூபாய் என்று மாநில அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. கைமுதலை இழந்து விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் &nbsp;நிவாரணம் வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.