தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

13 Mar 2026, 4:52 pm
நேரடி கொள்முதல் நிலையங்களில்  தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்
<p><strong>நேரடி கொள்முதல் நிலையங்களில் &nbsp;தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்</strong></p> <p>மயிலாடுதுறை, மார்ச் 13- &nbsp;மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில், விவசாயி களிடமிருந்து பெறப்பட்ட நெல், கிடங்கு களுக்கு முறையாக அனுப்பப்படாததால் ஒவ்வொரு மையங்களிலும் மலை போல் தேங்கி கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. &nbsp;மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 4 வட்டங்களிலும் 150-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடப்பு பருவத்தில் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல்மணிகள் பெறப்ப டுகிறது. மையங்கள் திறக்கப்பட்டது முதலே, நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல லாரிகள் முறையாக அனுப்பப்படாத நிலையில், ஒவ்வொரு மையங்களிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நெல்மூட்டைகள் மலை போல அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்தி லும் தேங்கிக் கிடக்கும் நெல்மூட்டைகள் திடீரென பெய்யும் மழையால் நனைந்து, முளைத்து சேதமாவது வாடிக்கையாகி வரும் நிலையில், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே இப்பணிக்கு அமர்த்தப்படும் பட்டியல் எழுத்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். &nbsp; இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;மயிலாடு துறை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்மணிகளை, சேமிப்பு கிடங்குகளுக்கு சரிவர அனுப்பி வைக்க தேவையான லாரிகள் இயக்கப்படாததால் நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. பல மையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எப்போது மழை பெய்யும் என கணிக்க முடியாத நிலையில் மழை பெய்து நாசமாகிவிடும் சூழலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளே உருவாக்கி விடக் கூடாது. &nbsp;ஒவ்வொரு மைய ங்களுக்கும் தேவையான சாக்கு பைகள், சணல் போன்றவைகளை தேவையான அளவு வழங்கவும் நடவடிக்கை எடுத்து, தேங்கிக் கிடக்கும் நெல்மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப தேவையான லாரிகளை உடனடியாக அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo;&rsquo; என வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.