முந்தய பக்கம்

வீதிகளில் கிடக்கும் நெல் மூட்டைகள்

18 Jul 2026, 9:41 pm
வீதிகளில் கிடக்கும் நெல் மூட்டைகள்
<p><strong>வீதிகளில் கிடக்கும் நெல் மூட்டைகள் </strong></p><p>விவசாயிகள் வேதனை கும்பகோணம், ஜூலை 18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 10,000 மூட்டைகள் குவியலாக பாதுகாப்பு இல்லாமல் தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டச் செயலாளர் என்‌.வி.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தின் பிரதான பணியே விவசாயம் தான். கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட சுமார் பத்தாயிரம் மூட்டைகள் குவியலாக பாதுகாப்பு இல்லாமல் தேங்கி கிடக்கின்றன. மழை வந்தால் விவசாயிகளும், நெல்லும் நனைய வேண்டும்; வெயில் வந்தால் இணைந்தே காய வேண்டும். இது மிகப்பெரிய அநீதியாகும். தற்போது கொள்முதலில் தேக்கம் ஏற்படுகிறது. விவசாயிகள் மத்தியில் பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகிறது. குறிப்பாக, கும்பகோணம், சோழபுரம், அசூர், கடிச்சம்பாடி, ஏரகரம், திருப்பு றம்பியம், தேவ னாஞ்சேரி, திருநல்லூர், கல்லூர், கோவிலாச்சேரி ஆகிய பகுதிகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி நெல் மூட்டைகள் தேக்கம் அதிகமாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram