தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

1 hour before
கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்
<p><strong>கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்</strong></p><p>நடவடிக்கை கோரி மனு சென்னை, ஜூலை 6 - தஞ்சை, மயிலாடுதுறை, திருவா ரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநி லத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை யில், உணவுத் துறை அமைச்சர் பி. வெங்கடரமணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “தஞ்சை, மயி லாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இயக்கம் இன்றி தேங்கி கிடக்கிறது. புதிதாக விவ சாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை களை கொள்முதல் செய்ய வழியின்றி கொள்முதல் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் மூட்டைகளை அடுக்கி வைத்து இரவு பகலாக காத்து கிடக்கின்ற னர். இதனால் விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் மட்டும் இந்த காலத்தில் 257 நெல் கொள்முதல் மையங்கள் திறக் கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட் டது. நெல் இயக்கம் இல்லாததால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயி கள் கொண்டு வரும் நெல்லை கொள் முதல் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்துகிற போது, பணியாளர்களும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. மாவட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினால் ஆய்வு செய்து, பார்வையிடுகிறார்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை. இத்தகைய சூழலில், விவசாயி களுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற் கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பதற்கும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். கொள்முதல் செய் யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்கு டன் கொள்முதல் நிலையங்களில் இருந்து அனுப்பி வைத்திட வேண்டும். நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்ப தற்கு தற்காலிக கொட்டகைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.