தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கான்சாபுரத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

20 Jun 2026, 11:11 pm
கான்சாபுரத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
<p><strong>கான்சாபுரத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு</strong></p><p>விருதுநகர், ஜூன் 20- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் அரசு நெல் கொள்முதல் நிலை யத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டை கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், நெடுங்குளம், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு விளைச்சல் நன்றாக இருந்ததால் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து வழங்கி வருகின்றனர். கான்சாபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஏராளமான நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நெல் மூட்டைகளை எடைபோட்டு கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால், கொள்முதல் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதால், விவசாயிகள் ஒரு வாரத் திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருவில்லி புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கான்சாபுரம் நெல் கொள்முதல் நிலை யத்தில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை உடனடி யாக எடைபோட்டு கொள்முதல் செய்யவும், அவற்றை பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.