முந்தய பக்கம்

அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

19 Jun 2026, 12:41 am
அரசு கொள்முதல் நிலையத்தில்  மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

செங்கல்பட்டு, ஜூன்.18 - செங்கல்பட்டு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக மழையில் நனைந்து சேதமடைந்தன.

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம் பாக்கம் பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்த சுமார் 6,000 நெல் மூட்டை கள் விவசாயிகளிடமிருந்து அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை கள் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நிலையில் மழையில் நனைந்து வீணாகி வருகின்றது.

இந்த நெல் மூட்டைகள் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதோடு, தார்பாய்கள் கொண்டு முறையாக மூடப்படாமலும் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது

. சில மூட்டைகளில் உள்ள நெல் ஈரப்பதம் காரணமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் பல மாத உழைப்பின் பலனாக விளைந்த நெல் இவ்வாறு சேதமடைந்தால் அரசுக்கு நட்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram