தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

28 Mar 2026, 4:13 pm
நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மற்றும் திருவை யாறு வட்டாரங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை கள் தேங்கிக் கிடப்பதால் விவசாயிகள் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். 1000க்கும் மேற்பட்ட மூட்டைகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட் டச் செயலாளர் என்.வி.  கண்ணன், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில்,”தற்போது இப் பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை களை அங்கிருந்து அப்பு றப்படுத்தி, கிடங்குக ளுக்குக் கொண்டு செல்லும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில்பத்து, வரகூர், திருப்பூந்துருத்தி, வெண் டையம்பட்டி, ராய முண்டாம்பட்டி, குழிமாத் தூர், பூதலூர், ஆவாரம் பட்டி, அய்யனாபுரம், நடுக் ்காவேரி, அம்மையகரம், திருவாலம்பொழில், கண்ட மங்கலம், பூதராயநல்லூர், விளாங்குடி என ஒவ்வொரு கொள்முதல் நிலையத்தி லும் தலா 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.  இதனால், புதிய நெல்லைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அறு வடை செய்த நெல்லை விற்ப னை செய்ய முடியாமல் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகி யுள்ளது.  நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதால் மழை, பனி உள்ளிட்ட எதிர்பாரா இயற்கை சீற்றங்களால் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயமும் உள்ளது.  எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தேங்கியுள்ள நெல் மூட்டைகளை தாமத மின்றி உடனடியாக அப்புறப் படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த பருவத்தைப் போலவே, ரயில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி, கொள்முதல் பணி களைத் தடையின்றி விரைவு படுத்த வேண்டும்.  என மாவட்ட ஆட்சியரிடம் என். வி. கண்ணன் சுட்டிக்காட் டியுள்ளார்.   முன்னதாக, நெல் கொள் முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண் ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், த.வி.ச ஒன்றியச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் பார் வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்ட றிந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.