படந்தாலுமூடு சந்தை சொத்தில் தனிநபருக்கு உரிமை நீதிமன்ற நியமனக் குழுவின் நில அளவைப்பணிக்கு பேரூராட்சி நிர்வாகம் , அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு
29 Sept 2026, 8:55 pm

படந்தாலுமூடு சந்தை சொத்தில் தனிநபருக்கு உரிமை நீதிமன்ற நியமனக் குழுவின் நில அளவைப்பணிக்கு பேரூராட்சி நிர்வாகம் , அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு

குழித்துறை, செப்.29- கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான படந்தாலுமூடு காளைச் சந்தை சொத்தில் ஒரு பகுதிக்குஅவகாசம் கோரி தனிநபர் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் படி, சந்தை சொத்தை அளவீடு செய்ய வந்த நீதிமன்றம் நியமனம் செய்தகுழுவினர், நில அளவையருக்கு பேரூராட்சிநிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அளவீடு பணிகள் மேற்கொள்ளாமல் திரும்பிச்சென்றனர்.

படந்தாலுமூடு பகுதியில் ஒருங்கிணைந்த காய்கனி, மீன்சந்தை மற்றும் காளைச்சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு 94.5 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்

பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இச் சொத்தில் ஒருபகுதிக்கு உரிமை கோரி அப்பகுதியைச் சேர்ந்த சௌமீந்திரநாதன் கடந்த 1991 இல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்த இவ் வழக்கின் இறுதி தீர்ப்பாணை (பைனல் டிகிரி)கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இத் தீர்ப்பில், 51 சென்ட் நிலம் சௌமீந்திரநாதனுக்கு உரிமைப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டதாககூறப்படுகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் நோக்கில், சொத்தை கைவசப்படுத்த குழித்துறை நீதிமன்றம் நியமித்த குழுவினர் மற்றும் விளவங்கோடு வட்ட நில அளவையர் உள்ளிட்டோர்படந்தாலுமூடு சந்தை பகுதிக்கு வந்து நில அளவையில் ஈடுபடமுயன்றனர். இதற்கு களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ. சுரேஷ் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர் ஏ. வின்சென்ட், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்களுமான என். விஜயேந்திரன், சதீஷ் சந்திரபிரசாத் மற்றும் அனைத்துக் கட்சிநிர்வாகிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பைதொடர்ந்து அவர்கள் சொத்து கையகப்படுத்தும்பணியை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

பேரூராட்சி சொத்தை பாதுகாக்க தவறிய நிர்வாகம்

களியக்காவிளை பேரூராட்சித் தலைவராக தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்பதவி வகித்து வரும் நிலையில், பேரூராட்சிக்குச் சொந்தமான சந்தை சொத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இச் சொத்து தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் உரிய காலத்தில் சமர்ப்பிக்காமல் தவறிய, அந்தந்த காலத்தில் பதவியில் இருந்தபேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் பேரூராட்சியின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பேரூராட்சியின் கையை விட்டுப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி சொத்தை பாதுகாக்க தவறிய பேரூராட்சிநிர்வாகத்துக்கு கடும் கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி என். விஜயேந்திரன் மற்றும் பலர்தெரிவித்துள்ளனர்.