முதலமைச்சருடன் ப. சிதம்பரம் சந்திப்பு
3 Mar 2026, 3:38 pm
<p><strong>முதலமைச்சருடன் ப. சிதம்பரம் சந்திப்பு</strong></p>
<p>சென்னை, மார்ச் 3- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 22 அன்று தொடங்கிய இந்த ஆலோசனைகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டா லினை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆகியோர் சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோ சனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந் தகை, “முதல்வர் ஸ்டாலினை ப. சிதம்பரம் சந்தித்தது மரி யாதை நிமித்தமான சந்திப்பு. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக நீடித்து வருகிறது; இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை; பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; திமுக தரப்பில் எந்தவித காலக் கெடும் விதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்து வம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தில்லி தலைமையி டம் ஆலோசனை நடத்தி வந்த பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம்</p>
