தெலுங்கானா எழுச்சியின் தீரமிகு தளநாயகர்
18 May 2026, 9:34 pm

தெலுங்கானா எழுச்சியின் தீரமிகு தளநாயகர்

இளம் வயதிலேயே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர் தோழர் பி.சுந்தரய்யா. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், கல்லூரிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் ஆனவர். தோழர் அமீர் ஹைதர் கானால் உருவாக்கப்பட்டு, அன்றைய சென்னை மாகாணப் பகுதிகளான ஆந்திரா, தமிழ்நாடு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டும் பணியில் முத்திரை பதித்தவர்.

இரண்டாம் உலகப் போரின் போது தலைமறைவாக இருந்து கட்சியின் தலைமறைவு மையங்களை உருவாக்கி வழிகாட்டியவர். தடை நீங்கிய பின் மும்பையின் மத்திய தலைமையகத்தில் செயல்பட்டவர். தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் தளகர்த்தராக விளங்கியவர். நாடு முழுவதும் கட்சித் தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததில் முன்னின்றவர்.

நாடாளுமன்றத்திலும் ஆந்திர சட்டமன்றத்திலும் மக்களின் உரிமைக் குரலை எதிரொலித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினத் தலைவர்களில் முக்கியமானவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர். பொதுவுடமை இயக்கத்தின் பெருமைமிகு தலைவரான பி.சுந்தரய்யாவின் புகழ்பேசும் சாட்சியமாகத் திகழ்கிறது சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரம். அது என்றென்றும் ஒளி வீசும். இன்றைய இளம் கம்யூனிஸ்டுகளின் ஆதர்ச நாயகனாக வழிகாட்டியாக விளங்குபவர்.

இன்று (மே 19) தோழர் பி.சுந்தரய்யா நினைவு நாள்.