முந்தய பக்கம்

தோழர் பி. சீனிவாசராவ் படத்திற்கு அஞ்சலி

1 Oct 2026, 10:58 pm
தோழர் பி. சீனிவாசராவ் படத்திற்கு அஞ்சலி

தோழர் பி. சீனிவாசராவ் படத்திற்கு அஞ்சலி

தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்தில், தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பு அலுவலக கட்டடப்பணிக்காக, கோவை மாவட்டக்குழுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி இலக்கை முழுமையாக பூர்த்தி செய்து, மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜிடம் ஒப்படைத்தார். நிகழ்வுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. இராமமூர்த்தி தலைமை வகித்தார். தீக்கதிர் கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. மனோகரன், கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், என். ஆறுச்சாமி, வி. சுரேஷ், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைக் குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram