முந்தய பக்கம்

குறைகளை ஏற்று சரிசெய்யும் அணுகுமுறை தொடர வேண்டும் - பெ.சண்முகம்

13 May 2026, 11:13 am
குறைகளை ஏற்று சரிசெய்யும் அணுகுமுறை தொடர வேண்டும் - பெ.சண்முகம்

முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்தை அரசு ரத்து செய்ததை சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram