தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘அரசுப் பணி வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்!’ தவெக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்

9 Jul 2026, 8:48 pm
‘அரசுப் பணி வழங்கும் முடிவை  நிறுத்தி வைக்க வேண்டும்!’ தவெக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்
<p><strong>‘அரசுப் பணி வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்!’ தவெக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 9 - கரூரில் உயிரிழந்தோர் குடும்பங் களுக்கு அரசுப் பணி வழங்கும் முடி வை, தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பெ. சண்முகம் மேலும் கூறியிருப்பதாவது: “தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஏற்கெனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு அரசு வேலை வழங்கப்போவ தாகத் தமிழக அரசு தற்பொழுது அறி வித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டி ருக்கிறது. அதற்குள் இப்படியான அறி விப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர் களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்கு வது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக் கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறி விப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.