எஸ்ஐஆர் பணிச் சுமையிலிருந்து அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்
17 Nov 2025, 3:10 pm
<p><strong>எஸ்ஐஆர் பணிச் சுமையிலிருந்து அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, நவ. 17 - சாலைகளில் பொதுக்கூட்டங் கள் மற்றும் பரப்புரைகள் நடத்து வதற்கான வழிகாட்டு நெறிமுறை களை வகுப்பது தொடர்பாக தமிழ் நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை, அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் கடிதமாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகி யோர் அளித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு, பெ. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதி லளித்துப் பேசுகையில், “பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தற்போது வரை எஸ்ஐஆர் படி வங்கள் சென்று சேரவில்லை. இணையத்தில் பதிவு செய்வதும் எளிமையாக இல்லை. இதுதொ டர்பாக முழுமையான விவரம் மக்களி டம் சென்று சேரவில்லை. வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் முறை யான பயிற்சி அளிக்கவில்லை.மக்க ளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள் கூடுதலாக தேர்தல் ஆணையத்தின் பணியை செய்ய வேண்டியுள்ளது. இதனால் கடுமையான பணிச் சுமையில் மன அழுத்தத் தில் உள்ளனர். எனவே எஸ்ஐஆர் பணிகளை நவ. 18 முதல் புறக்கணிக்க போவதாக பல்வேறு துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள் அறிவித்து உள்ளன. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட அலுவலர் சங்கங்களை அழைத்துப் பேசி முறைப்படுத்து வது, பணிச் சுமையில் இருந்து விடுவிப்பது தொ டர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.</p>
