‘கண்ணியமாக நடந்து கொள்வீர்!’ பெ. சண்முகம் வேண்டுகோள்!
24 Jun 2026, 10:54 pm

‘கண்ணியமாக நடந்து கொள்வீர்!’ பெ. சண்முகம் வேண்டுகோள்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், திங்களன்று நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது” என்றும், அவ்வாறிருக்கையில், “சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, ‘அப்பாவைக் காணோம்’ என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதற்கு எதிர் வினையாக, எதிர்க்கட்சித் தலைவர், கணவனைத் தேடும் மனைவி’ என்று பேசியதும் தவறுதான் என சுட்டிக் காட்டியிருக்கும் பெ. சண்முகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என “இருதரப்பினருமே கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.