தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏழை மக்களின் வாழ்விட உரிமையே சென்னை வளர்ச்சி நீதிமன்ற உத்தரவுகளைத் தடுத்து, பட்டா வழங்க நிரந்தரத் தீர்வு காண பெ.சண்முகம், உ.வாசுகி வலியுறுத்தல்

16 Dec 2025, 3:51 pm
ஏழை மக்களின் வாழ்விட உரிமையே சென்னை வளர்ச்சி  நீதிமன்ற உத்தரவுகளைத் தடுத்து, பட்டா வழங்க நிரந்தரத்  தீர்வு காண  பெ.சண்முகம், உ.வாசுகி வலியுறுத்தல்
<p><strong>ஏழை மக்களின் வாழ்விட உரிமையே சென்னை வளர்ச்சி&nbsp;நீதிமன்ற உத்தரவுகளைத் தடுத்து, பட்டா வழங்க நிரந்தரத்&nbsp; தீர்வு காண &nbsp;பெ.சண்முகம், உ.வாசுகி வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, டிச. 16 &ndash; &nbsp;சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க் ழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலி னிடம் மனு அளிக்கப்பட்டது. &nbsp;பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த இயக்கத்தில் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் உரையாற்றினர். &nbsp;நீதிமன்ற அப்புறப்படுத்தலைத் தடுக்க வலியுறுத்தல் &nbsp;பெ. சண்முகம் பேசுகையில், தமிழ் நாடு முழுவதும் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் பல தலை முறைகளாக வசிக்கும் லட்சக்கணக் கான குடும்பங்கள், நீதிமன்ற உத்தர வுகள் அல்லது அதிகாரிகளின் ஆணை &nbsp;என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படு வது மிகப்பெரிய பிரச்சனையாக உள் ளது என்று சுட்டிக்காட்டினார். நீதிமன்றங் கள் மக்களின் வாழ்வுரிமையைப் பற்றி &nbsp;கவலைப்படாமல் &lsquo;தானடித்த மூப்பாக&rsquo; குடியிருப்புகளை இடித்துத் தரைமட்ட மாக்குவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார். &nbsp;முக்கியக் கோரிக்கைகளும் அரசு உறுதிமொழியும் &nbsp;&lsquo;தோட்டங்களில்&rsquo; உள்ள உரிமை யாளர் இல்லாத நிலங்களுக்குப் பட்டா &nbsp;வழங்க வேண்டும், உரிமையாளர் இருந்தால் நிலத்தை அரசே விலைக்கு வாங்கிப் பட்டா வழங்க வேண்டும். பாது காப்புத் துறை, ரயில்வே மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது; அரசே மாற்று ஏற்பாடுகளைச் செய்து அவர் களுக்குப் பட்டா வழங்க வேண்டும். மேலும், கோவில் நில வாடகை தாரர்களை வெளியேற்றாமல், அவர் களுக்கு அந்த இடத்தை சொந்த மாக்கச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை உள்ளிட்ட பல வகையான புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க &nbsp;வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டங் கள் மற்றும் கோரிக்கைகளின் விளை வாக, ஆட்சேபணைக்குரிய புறம்போக்குகளை வகை மாற்றம் செய்வது குறித்து முடி வெடுக்க உயர் அதிகாரிகள் கொண்ட &nbsp;குழுவை அமைப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றும், பட்டா &nbsp;பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப் படும் என்றும் அவர் தெரிவித்தார். &nbsp;மேலும், 60 ஆண்டுகளாகத் தடையாக இருந்த &lsquo;பெல்ட் &nbsp;ஏரியா&rsquo; தடை நீக்கப்பட்டதை வரவேற்றார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் &nbsp;குடியிருப்புகளில் வட்டி, அபராத வட்டி யைத் தள்ளுபடி செய்து, முழுமை யாகப் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக கிரயப் பத்திரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். &nbsp;உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமையே வளர்ச்சி &nbsp;உ. வாசுகி பேசுகையில், அடித்தட்டு &nbsp;மக்களின் நியாயமான கோரிக்கை களுக்காக களத்தில் இறங்கிப் போராடுவது கம்யூனிஸ்ட்டுகள்தான் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது என்று கூறினார். பட்டா வழங்குவதற்கு நில வகை மாற்றம் மட்டுமல்லாது, ஒன்றிய அரசின் நகர்ப்புற சீர்திருத்தக் கொள்கைகளும் தடையாக உள்ளன. பொதுச் சொத்துகளை விற்று அல்லது மக்கள் மீது கட்டணங்களை விதித்து உள்ளாட்சி அமைப்புகள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று &nbsp;ஒன்றிய அரசு வற்புறுத்துகிறது என்றார். &nbsp;சென்னையின் வளர்ச்சியில் உழைப்பாளி மக்களுக்குப் பங்கு &nbsp;இருந்தும், அந்தப் பலன் அவர் களுக்குப் போய்ச் சேரவில்லை என்று &nbsp;அவர் குற்றம் சாட்டினார். நகர்ப்புற வளர்ச்சி என்பது பணக்காரர்களுக் கான வளர்ச்சியாக இல்லாமல், உழைக்கும் மக்களுடைய வாழ்விட உரிமை மற்றும் வளர்ச்சியோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குடியிருப்பு என்பது மக்களின் வாழ்வாதார உரிமை, அவர்களின் அடிப்படை உரிமை என்று கூறிய அவர், அனைவருக்கும் பட்டா கிடைக்கும் வரை கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்து நின்று போராடும் என்று உறுதி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.