தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதவெறியர்களை எதிர்க்க களத்திலும், கருத்தியல் ரீதியாகவும் போராட உதவும் ஆய்வு நூல் சேவியரின் நூல் அறிமுக நிகழ்வில் பெ.சண்முகம் பேச்சு

22 Jan 2026, 2:57 pm
மதவெறியர்களை எதிர்க்க களத்திலும், கருத்தியல் ரீதியாகவும் போராட உதவும் ஆய்வு நூல் சேவியரின் நூல் அறிமுக நிகழ்வில் பெ.சண்முகம் பேச்சு
<p><strong>மதவெறியர்களை எதிர்க்க களத்திலும், கருத்தியல் ரீதியாகவும் போராட உதவும் ஆய்வு நூல் சேவியரின் நூல் அறிமுக நிகழ்வில் பெ.சண்முகம் பேச்சு</strong></p> <p>சென்னை, ஜன. 22 - மதவெறியர்களை எதிர்க்க களத்திலும் கருத்தி யல் ரீதியாக போராட உத வும் நூல் &lsquo;திருபரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு&rsquo; நூல் என்று &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித் துள்ள &lsquo;திருபரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு&rsquo; நூல் அறிமுக விழா புத னன்று (ஜன.21) சென்னை யில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் &nbsp; பெ.சண்முகம் பேசுகையில், &ldquo;71 தமிழ் நூல்கள், 56 ஆங்கில நூல்களை ஆய்வு செய்து மிகச்சிறந்த கருத்தாயுதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும் சூர்யா சேவியர் வழங்க வேண்டும். சனாதனத்திற்கு எதிராக மத நம்பிக்கை யாளர்களே கருத்து தெரி வித்தாலும், மதவெறியர்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றார். திருப்பரங்குன்றம், அமித்மாளவியா வழக்கில் வந்துள்ள தீர்ப்புகள், நீதித்துறையில் வலது சாரி பிற்போக்கு, சனாதன வாதிகள் எந்தளவிற்கு ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது. இவர்களை எதிர்த்து களத்திலும், கருத்தியல் ரீதியாகவும் போராட வேண்டி உள்ளது. அதற்கான தகவல் களஞ்சியமாக இந்த நூல் உள்ளது&rdquo; என்றும் அவர் கூறினார். &ldquo;நீதித்துறையே துணை நின்ற போதும் மதவெறியர்களால் திருப் பரங்குன்றத்தில் மதநல்லி ணக்கத்தை சீர்குலைத்து, கலவரத்தை உருவாக்க முடியவில்லை. உயர்நீதி மன்றமே தீர்ப்பளித்தாலும், மக்களின் ஒற்றுமைக்கு, மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படு மாயின் அதனை அமல்படுத்த மாட்டோம் என்ற நிலை எடுத்த முதலமைச்சரை பாராட்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மதவெறியர்கள் தற்போது திண்டுக்கல்லில் பிரச்சனை எழுப்பியுள்ளனர். இவர்களின் தந்திரங்களை அறிவாயுதத்தின் மூலம் எதிர்கொள்ள இதுபோன்ற நூல்கள் உதவும்&rdquo; என்றும் பெ.சண்முகம் கூறினார். ஆ.ராசா திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா குறிப்பிடுகையில், நீதி மன்றம் தவறு செய்தால் அதை திருத்தி அமைக்கக் கூடியதாக தமிழகம் உள்ளது. பல நூற்றாண்டு வரலாறுகளை உள்ள டக்கிய ஒரு நூலை சூர்யா சேவியர் எழுதியுள்ளார். அண்ணா எழுதிய &lsquo;தீ &nbsp;பரவட்டும்&rsquo; நூல் ஏற்ப டுத்திய எழுச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது என்றார். சங்க இலக்கியங்களில் எங்கும் சனாதனம் என்ற சொல் இல்லை என்பதை ஆய்வு செய்து நூலாசிரியர் நிறுவியுள்ளார். திராவிட பண்பாடும் - ஆரிய பண்பாடும் எப்போதும் எதிராகத்தான் இருந்து ள்ளது. அதற்கான ஆதா ரங்களை நூலாசிரியர் கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் வெறும் குன்று அல்ல. மதவாதத்தை, மோடியை, அமித்ஷாவை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் அரண். அதனை பலப்படுத்தி பாது காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். சூர்யா சேவியர் ஏற்புரையாற்றிய எழுத்தாளர் சூர்யா சேவியர், இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை எழுத்தாளர் விஜயசங்கர் தொடங்கிவிட்டார். பிப்ரவரி மாதத்தில் தில்லியில் அந்நூல் வெளியிடப்படும் என்றார். டாக்டர் எழிலன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, திக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, ஊடகவியலாளர் செந்தில்வேல், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் ஆகியோர் பேசினர். ஊடகவியலாளர் பவித்ரா பாலசுப்பிரமணி யம் நிகழ்வை ஒருங்கி ணைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.