முந்தய பக்கம்

தீண்டாமையைக் கடைபிடிக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - பெ.சண்முகம்

27 Apr 2026, 11:48 am
தீண்டாமையைக் கடைபிடிக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - பெ.சண்முகம்

தமிழகத்தில் ஜாதி இல்லாவிட்டால் அரசியல் இல்லை என கூறிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சாதியை பாதுகாப்பவர்களே சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதே!

சாதியை உருவாக்கிய கூட்டம், இப்போதும் அதைச் சரி என்று சாதிக்கும் கூட்டம், சாதிய அணிசேர்க்கைக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகமளிக்கும் கூட்டம், சாதியப் பாகுபாடுகளை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் கூட்டம் பாஜக - ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகம் அறியும்.

தேர்தல் அரசியலில் சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்து பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. "பண்பாடு” என்ற பெயரில் சாதியைக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக இருப்பவர்களே நீங்களும், உங்கள் மதமும் தானே! இவ்வறு பதிவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram