தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் யுகத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியக் கொடுமைகள் ‘பைசன்’ பட பாராட்டு விழாவில் பெ. சண்முகம் ஆவேச உரை!

10 Jan 2026, 2:48 pm
அறிவியல் யுகத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியக் கொடுமைகள் ‘பைசன்’ பட பாராட்டு விழாவில் பெ. சண்முகம் ஆவேச உரை!
<p><strong>அறிவியல் யுகத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியக் கொடுமைகள் &lsquo;பைசன்&rsquo; பட பாராட்டு விழாவில் பெ. சண்முகம் ஆவேச உரை!</strong></p> <p>சென்னை, ஜன. 10- நாகரிகமும் அறிவியல் தொழில்நுட்ப மும் வளர்ந்த இன்றைய காலக்கட்டத்தி லும், சாதியக் கட்டமைப்பும் அதன் வழி யிலான ஒடுக்குமுறைகளும் சமூகத்தில் வேறு வடிவங்களில் நீக்கமற நிறைந்துள் ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில், இயக்குநர் மாரி செல்வராஜின் &lsquo;பைசன்&rsquo; திரைப்படத்தைப் பாராட்டும் விதமாகச் சென்னையில் வெள்ளியன்று (ஜன. 10) சிறப்பு நிகழ்வு &nbsp;நடைபெற்றது. இயக்குநர் மாரி செல்வ ராஜிற்கு நினைவுப் பரிசை வழங்கி பெ. சண்முகம் பேசினார். உருமாறி நிற்கும் சாதிய ஒடுக்குமுறை அப்போது, மாரி செல்வராஜின் படைப்புகள் அனைத்தும் மக்களுடன் நேரடியாக உரையாடுபவை. சாதிய முரண்பாடு கொண்டவர்களையும் ஏற்கச் &nbsp;செய்யும் கலை நேர்த்தியைக் கொண்டுள்ள &lsquo;பைசன்&rsquo; திரைப்படம், நம் வாழ்வின் எதார்த்தங்களைப் பிரதி பலிக்கிறது. இன்றைய சூழலில் சாதியக் கொடுமைகள் மறைந்துவிடவில்லை; மாறாக அவை வேறு வடிவங்களில் உருமாறி வலிமையாக நீடிக்கின்றன. படித்தவர்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் சாதிய சங்கங்கள் பெருகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. களத்தில் நாங்கள் நடத்தும் போராட்டங்களைப் போலவே, மாரி செல்வராஜ் தனது கலைப்படைப்புகள் மூலம் சமூக மாற்றத் திற்கான பெரும் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார் என்றார். திரைத்துறை நெருக்கடியும், விஜயின் மௌனமும் தற்போது திரைத்துறை கடுமையான கருத்துரிமைப் பறிப்பைச் சந்தித்து வரு கிறது. &lsquo;ஜனநாயகன்&rsquo;, &lsquo;பராசக்தி&rsquo; போன்ற திரைப்படங்கள் தணிக்கை வாரியத்தின் பிடியில் சிக்கிப் போராடுகின்றன. நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் காலங்கடத்துவது ஜனநாயக விரோதமானது. அரசியல் நெருக்கடி கொடுத்து நடிகர் விஜயை வளைக்க ஒன்றிய அரசு முயல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வளவு அநீதிகள் நடந்தும், பாதிக்கப்பட்ட படக்குழுவினரும், நடிகர் விஜயும் மௌ னமாக இருப்பது ஏன்? மக்கள் பிரச்ச னைகளைப் பேசுவதாகக் கூறி வருப வர்கள், கருத்துரிமை பறிக்கப்படும்போது மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் சண்முகம் கூறினார். சமூக அவலங்களை வெளிச்சமிட்ட தலைவர்கள் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் பேசுகையில், மாரி செல்வராஜின் படங்கள் சாதி ஒழிப்பை முன்வைத்து அனைவருடனும் உரை யாடுவதாகவும், இயக்கப் பணியின் ஒரு பகுதியை அவரது கலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, கள ஆய்வுகளின் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தினார்: &ldquo;தமிழகத்தில் 441 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பட்டியலின மாணவர்கள் கழிவறையைச் சுத்தம் செய்ய வைக்கப்படுவது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் இன்றும் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆணவக் கொலைகள் மற்றும் மலக்குழி மரணங்களுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை மாரி &nbsp;செல்வராஜ் இன்னும் ஆயிரம் திரைப் படங்களாக உருவாக்கலாம்&rdquo; என்றார். முன்னணியின் சிறப்புத் தலைவர் எஸ். கே.மகேந்திரன், தென்மாவட்டங்க ளில் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கம்யூ னிஸ்டுகள் நடத்திய வரலாற்றையும், கபடி வீரர்களின் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். இயக்குநர் &nbsp;மாரி செல்வராஜ் ஏற்புரை நிகழ்ச்சியில் உணர்ச்சி பொங்க ஏற்புரையாற்றிய இயக்குநர் மாரி செல்வ ராஜ், &ldquo;எனது சித்தப்பா தோழர் வேலுச்சாமி ஒரு கம்யூனிஸ்ட்; அவரே எனது முதல் நாயகன். அவரிடமிருந்தே அறத்தையும் நீதியையும் கற்றுக்கொண்டேன். அநீதி இழைக்கப்பட்டவர்களிடமும், அநீதி இழைத்தவர்களிடமும் ஒரே நேரத்தில் உரையாட விரும்புகிறேன். ஏனெனில், அநீதி இழைப்பவரும் ஒரு சூழலால் மிருக மாக மாற்றப்பட்டுள்ளார் என்பதை அவ ருக்கு உணர வைக்க வேண்டும். அனைவ ரையும் வென்றெடுப்பதே எனது கதைக ளின் அடிப்படை. சாதிக்கு எதிரான படங் களை எடுக்கப் பெரும் பொறுப்புணர்வும் பக்குவமும் தேவை&rdquo; என்றார். இந்நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் ச. லெனின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் கே. மணிகண்டன், ஐ. ஆபேல்பாபு, மாநில நிர்வாகிகள் கே. சுவாமிநாதன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் கே. ஆதன் இளங்கீரன் வரவேற்க, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். ஆனந்தகுமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.