தோழர் தேவராஜுலு உடலுக்கு பெ.சண்முகம் அஞ்சலி
5 Jun 2026, 11:22 pm
<p><strong>தோழர் தேவராஜுலு உடலுக்கு பெ.சண்முகம் அஞ்சலி</strong></p><p>சென்னை, ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் முனைவர் ஏ.டி.ரேவதி யின் தந்தையுமான ஏ.பி.தேவராஜுலு (91) புதனன்று (ஜூன் 3) காலமானார். கொளத்தூர் காமராஜ் நகர், முதல் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, ச.லெனின், பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி, இரா.தெ.முத்து (தமுஎகச), நிர்வாகிகள் கேத்தரின் தெரேசா, என்.கோபி, ஜான் உள்ளிட்ட ஏராளமானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வெள்ளியன்று (ஜூன் 5) கொளத்தூர் பல்லவன் சாலையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.</p>
