முந்தய பக்கம்

விழுப்புரத்தில் பெ. சண்முகம் தலைமையில் சாதி - சடங்கு மறுப்பு திருமணம்!

3 Jul 2026, 9:09 pm
விழுப்புரத்தில் பெ. சண்முகம் தலைமையில் சாதி - சடங்கு மறுப்பு திருமணம்!
<p><strong>விழுப்புரத்தில் பெ. சண்முகம் தலைமையில் சாதி - சடங்கு மறுப்பு திருமணம்!</strong></p><p>சென்னை, ஜூலை 3 - விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ப. மதன்ராஜ் - குழந்தைகள் நல ஆலோசகர் அ. சண்முகி ஆகியோரின் சாதி - சடங்கு மறுப்புத் திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் மணமக்களை வாழ்த்திப் பேசிய பெ. சண்முகம், திருமணத்தில் ஐயர் தேவை யில்லை, மார்க்சிய சிந்தனையே போதும் என மணமக்கள் காட்டியுள்ளனர். அதேபோல ஐயரை வைத்து, காலையில் திருமணம் நடத்தும் வழக்கத்தை உடைத்து, இங்கு இரவு 7:30 மணிக்கு திருமணம் செய்துள்ளனர்; இது தான் உண்மையான முற்போக்கு என்று பாராட்டினார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஆர். ராமமூர்த்தி (சிபிஎம்), செ. புஷ்பராஜ் (திமுக), வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், விசிக மாவட்டச் செயலாளர் ர. பெரியார், திமுக மாவட்டப் பொருளாளர் ஆர். ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram