கோட்டூரில் சிபிஎம் புதிய கட்சி அலுவலகம் தியாகி ராசு நினைவகத்தை பெ.சண்முகம் திறந்து வைத்தார்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>கோட்டூரில் சிபிஎம் புதிய கட்சி அலுவலகம் தியாகி ராசு நினைவகத்தை பெ.சண்முகம் திறந்து வைத்தார்</strong></p>
<p>மன்னார்குடி, டிச.14- ரூ.40 லட்சம் கட்டுமான மதிப்புள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியக் குழு (திருவாரூர்) அலுவலக மான தியாகி தோழர் ராசு நினைவகம சனிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எழுச்சி முழக்கங்களுக்கு இடையில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் ரிப்பன் வெட்டி, நினைவகத்தைத் திறந்து வைத்தார். ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் எல்.சண்முகவேலு வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செய லாளர் டி.முருகையன், தியாகி ராசு நினை வக பெயர் பலகையை திறந்து வைத்தார். நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி. மாரி முத்து, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, திருவாரூர் மாவட்டத்தின் மூத்த கட்சித் தோழர் எஸ். தங்கராசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார். பொதுக்கூட்டம் இதனைத் தொடர்ந்து, கோட்டூர் கடைவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்த ராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் சிறப்புரையாற்றினார். திறப்பு விழா விலும், பொதுக் கூட்டத்திலும், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர், அனைத்து கட்சித் தலைவர்கள், உறுப்பி னர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.</p>
<p> </p>
