தர்மேந்திர பிரதானை மோடி நீக்க வேண்டும்! ‘உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டும்!’
24 Jul 2026, 9:12 pm
<p><strong>தர்மேந்திர பிரதானை மோடி நீக்க வேண்டும்! ‘உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டும்!’</strong></p><p>சென்னை, ஜூலை 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது என வேண்டாத வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் அமைச்சரை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? ‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நீட் தேர்வு குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே!” இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>
