உள்ளாட்சி, இடைத்தேர்தல் குறித்து இடதுசாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை: பெ.சண்முகம்
15 Jul 2026, 10:34 pm

உள்ளாட்சி, இடைத்தேர்தல் குறித்து இடதுசாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை: பெ.சண்முகம்

சென்னை, ஜூலை 15- தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் குறித்து இடதுசாரி கட்சிகள் இதுவரை எந்தவொரு முடி வும் எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்மு கம் தெரிவித்துள்ளார். புதனன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தி த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறை படுகொலையும் அரசுப்பணி கோரிக்கையும்

நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாகப் பெ.சண்முகம் தெரிவித்தார். இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடக்கா மல் தடுப்பதே அரசுக்கு நற்பெயரைத் தரும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கணினி பட்டதாரியான சபரிவர்மனின் மனைவிக்குத் தகுதிக்கேற்ப உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தூய்மைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பெ.சண்முகம் கேட்டுக்கொண் டார். தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அடிமைகளாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளா வதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசு நிர்ணயித்த ஊதியத்தை அவர் களுக்கு வழங்கி, ஒப்பந்தத் தொழி லாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தீண்டாமைக் கொடுமையும் அம்பேத்கர் சிலை சர்ச்சையும்

சேலம் ஒதியத்தூரில் பிற்படுத்தப் பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்கள் இணைந்து அமைத்த அம்பேத்கர் சிலையின் தோற்றம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தமிழகத்தில் இன்னமும் சாதிய பாகுபாடும் தீண்டா மைக் கொடுமையும் கோலோச்சுவ தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது என்று சாடிய அவர், இந்தச் சாதிய மனப்போக்கிற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றார்.

பழனி நில விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்-க்குக் கண்டனம்

பழனி கோவில் நில விவகாரம் குறித்துப் பேசிய அவர், அது கோவில் நிலமாகவே இருந்தாலும் இந்து பக்தர்களுக்கே பட்டா வழங்க கோருவதாகவும், ஆனால் இந்துக் களுக்கு எதிராகவே ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாகத் தவறிழைத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குதிரை பேர அரசியலுக்குக் கண்டனம்

பல்வேறு மாநிலங்களில் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொத்தாக இழுக்கும் பாஜக வின் குதிரை பேர அரசியலைக் கடுமையாகச் சாடிய பெ.சண்முகம், திமுக, தவெக என யார் இதில் ஈடுபட்டாலும் அது தவறு என்றார். மக்கள் பிரதிநிதிகளை ஆசை வார்த்தை காட்டியும் பண பலத்தா லும் இழுக்கும் இத்தகைய ஜனநா யக விரோத குதிரை பேரங்களுக்கு எதிராகத் தொகுதி மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும், அதேநேரம் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பிடிக்காமல் சிலர் வெளியேறி மாற்று இடங்களுக்குச் செல்வதை இதனுடன் ஒப்பிடக் கூடாது என்றும் விளக்கமளித்தார்.