முந்தய பக்கம்

தோழர் டி. அய்யாறு குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் ஆறுதல்

13 Feb 2026, 5:58 pm
தோழர் டி. அய்யாறு குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் ஆறுதல்
<p><strong>தோழர் டி. அய்யாறு குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் ஆறுதல்</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் டி.அய்யாறு (வயது 82) உடல்நலக் குறைவால் திங்களன்று காலமானார். டி.ஏ. என அன்போடு அழைக்கப்படும் தோழர் டி. அய்யாறு திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் அயராது போராடியவர். இந்நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குடவாசல் அருகே உள்ள ஏரூந்தவாடியில் தோழர் டி. அய்யாறு இல்லத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் நகரச் செயலாரும், டி. அய்யாறுவின் மகன் சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக தோழர் டி. அய்யாறு உருவப்படத்திற்கு மலர் மாலை வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் டி. லெனின் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram