மறைந்த மதுரை மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் ஆறுதல்
yesterday
<p><strong>மறைந்த மதுரை மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் ஆறுதல்</strong></p><p>மதுரை, ஜூன் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு உறுப்பி னரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னருமான டி. குமரவேல் மறைவை யொட்டி, அவரது குடும்பத்தினரை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த ஏப்ரல் 26 அன்று மாரடைப் பால் காலமான தோழர் டி. குமரவே லின் மதுரை பனங்காடியில் உள்ள இல்லத்திற்குச் சென்ற பெ. சண்முகம், அவரது மனைவி கு. லீலாவதி, மகன்கள் கு. பாலமுருகன், கு. கார்த்தி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அப்போது, தோழர் குமரவேல் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்றும் உறுதுணை யாக இருக்கும் என அவர் உறுதி யளித்தார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், வை. ஸ்டாலின், மதுரை மாநகராட்சி மேயர் தி. நாகராஜன், வடக்கு-1 பகுதி குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கா. ஜாகிர் உசேன், மூத்த தோழர் பி. ராதா, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் மணி பாரதி, மாவட்டச் செயலாளர் ஆ.பால முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
