மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? - பெ.சண்முகம் கண்டனம்
25 May 2026, 11:22 am
<p>கடந்த 2 வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை 4ஆவது முறையாக உயர்ந்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;</p><p>பெட்ரோல்- டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இன்று பெட்ரோல் ரூ 107.77 டீசல் ரூ 99.55. இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல ஒன்றிய - மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவீதம். </p><p>உங்களால் சர்வதேச சந்தையில் விலையை குறைக்க முடியாது. அமெரிக்கா- ஈரான் சண்டையை நிறுத்த முடியாது. விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க ஒன்றிய - மாநில அரசுகள் முன்வர வேண்டும். என தெரிவித்துள்ளார்.</p>
