தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வி நிலையம், மருத்துவமனை வரிசையில் ‘தனியார் சுடுகாடா?’ உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு பெ. சண்முகம் கண்டனம்

10 Feb 2026, 4:50 pm
கல்வி நிலையம், மருத்துவமனை வரிசையில் ‘தனியார் சுடுகாடா?’ உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு பெ. சண்முகம் கண்டனம்
<p><strong>கல்வி நிலையம், மருத்துவமனை வரிசையில் &lsquo;தனியார் சுடுகாடா?&rsquo; உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு பெ. சண்முகம் கண்டனம்</strong></p> <p>சென்னை, பிப். 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஜக்கி வாசுதேவின் &lsquo;ஈஷா மையம்&rsquo; தனி யாக சுடுகாடு வைத்துக்கொள்ள சென்னை &nbsp;உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 21 அன்று அனுமதி வழங்கியுள்ளது. தனியாக சுடுகாடு வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு அங்கே மரணங்கள் நிகழ்கிறதா? தனியார் கல்வி நிலையம், தனி யார் மருத்துவமனை, தனியார் கம்பெனி கள் போல், தனியார் சுடுகாடும் இனி செயல்படுமா? ஏற்கெனவே, இந்த நிறுவனத்தில் பல சந்தேக மரணங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சட்ட விரோத மாக பல செயல்களில் ஈஷா மையம் ஈடு பட்டு வருவதாக அவ்வப்போது மக்களால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தனியார் சுடுகாடு என்றால் அந்த சுடுகாட்டில் எரிக்கப்படும் பிணம் எல்லாம் இயற்கையான மரணம் என்று அவர்களே சான்றிதழ் கொடுத்துக்கொண்டால் அரசு என்ன செய்யும்? அரசின் கண்காணி ப்பு, கட்டுப்பாடு ஏதாவது இருக்குமா?பல மர்மங்கள் நிறைந்த ஒன்றாக, &lsquo;ஈஷா &nbsp;மையம்&rsquo; இருந்து வருவதை நினைவுபடுத்து கிறேன். அனைவருக்கும் பொது மயானம் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில், வசதியுள்ளவர்கள் தனியாக சுடுகாடு வைத்துக் கொள்ளலாம் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.