தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

3 Oct 2026, 10:57 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

உருவ கேலி கண்டனத்திற்குஉரியது: பெ. சண்முகம்

சென்னை: தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளரைக் குறிப்பிட்டு உருவகேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் வேட்பாளர் குறித்துசொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல்அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்,” என்று கூறியுள்ளார். “உருவ கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

கவின் ஆணவக்கொலை வழக்கில்அரசு மேல்முறையீடு செய்யும்!

அமைச்சர் வன்னியரசு பேட்டி தூத்துக்குடி: மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டட வழக்கில் அரசுதரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், இந்த வழக்கிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.தூத்துக்குடி விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கவின் சாதிஆணவப்படுகொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட சுர்ஜித்தின் தந்தையும் தாயும்விடுவிக்கப்பட்டிருப்பதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்வதற்கு அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறது. சட்டத்துறை அமைச்சர், கவினின் தாயார் தமிழ்ச்செல்வியிடம் தொடர்பு கொண்டு நாங்கள் மேல்முறையீடு செய்கிறோம் என்று கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று கூறினார்.

“தவெக அரசு உருவாவதற்கு கம்யூனிஸ்டுகளும் ஒரு காரணம்; அவர்கள் சொல்கின்ற ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அரசு ஏற்றுக்கொண்டு பல சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது; ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்பதுஏற்புடையது தான். அதில் எந்த தவறும் கிடையாது” என்றும் தெரிவித்தார்.

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம்சட்ட ரீதியாக செயல்படுவதை உறுதி செய்க!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்தஞ்சாவூர்: கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சட்டரீதியாக தொடர்ந்து செயல்படுவதையும், வாடிக்கையாளர் சேவைகள் தடையின்றி நடைபெறுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என சிபிஎம் தஞ்சை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், 123 ஆண்டுகள் பழமை வாய்ந்தஇந்நிறுவனத்துக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 156 கிளைகளும், 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குதாரர்களும் உள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற இயக்குநர் தேர்தலில் ஏற்கெனவே நிர்வாகத்தில் இருந்தவர்களே மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தலைவர், செயலாளர், இயக்குநர்களாக சட்டப்படியும் நிறுவன விதிகளின்படியும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல், பொதுக்குழு நடைமுறைகள் தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை சட்டப்பூர்வமாகவும் நிறுவன விதிகளின்படியும் தீர்க்க வேண்டும் என்றும்,அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும். நிர்வாகிகள், ஊழியர்கள் மீது காவல்துறைவழக்குப்பதிந்து கைது செய்ததையும் சிபிஎம் கண்டிப்பதாக கூறியுள்ள அவர்,நிறுவனம் தொடர்ந்து செயல்படவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும், நிறுவனத்தின் நன்மதிப்பு, பங்குதாரர்கள் மற்றும் உறுப்பினர்களின் முதலீடுகள், நகைகள் பாதுகாக்கப்படுவதையும், நிர்வாகம் சட்டம் மற்றும் நிறுவன விதிகளின்படி நடைபெறுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.