தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமம்தோறும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியெழுப்ப பெ.சண்முகம் அழைப்பு - இடதுசாரிகளின் பங்கு

27 Oct 2026, 9:45 pm
கிராமம்தோறும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியெழுப்ப பெ.சண்முகம் அழைப்பு - இடதுசாரிகளின் பங்கு

கிராமம்தோறும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியெழுப்ப பெ.சண்முகம் அழைப்பு - இடதுசாரிகளின் பங்கு

சேலம், அக்.27-நமக்கான தேவைகளை அறிந்து, அனைத்துக் கிராமங்களிலும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை அமைத்து, நமக்கான போராட்டத்தை நாம்தான் போராடிப் பெற வேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவருமான பெ.சண்முகம் தெரிவித்தார்.

அரிசி, சர்க்கரை 25–30% உயர்வு

எடப்பாடியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தீபாவளி நெருங்கும் நிலையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் 25 முதல் 30 சதவீதம் உயர்ந்துள்ளது; விலைவாசி உயர்ந்துள்ளதை ஏற்கக்கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்றார். ஜிஎஸ்டி, வாட்வரியைக் குறைத்தால் விலையைக் குறைக்க முடியும் என்ற நிலையிலும் மோடியும் அமித் ஷாவும் அதைக்கண்டுகொள்வதில்லை என்றார். அரிசி விலை உயர்வுக்குப் பதுக்கல் காரணம் எனவும், எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதே சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணம் எனவும், எத்தனால் உற்பத்தியை நிறுத்தினால் அரிசி, சர்க்கரை விலையைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார். ஒரு காலத்தில் மக்கள் பசியால் கிடைத்ததை உண்ட நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்றார்.

இடதுசாரிகளின் பங்குஇக்காலகட்டத்தில் இடதுசாரிஇயக்கம் வலுப்பெறுவது முக்கியம் எனக் கூறிய பெ.சண்முகம், வெளியிலிருந்து ஆதரவு அளித்த நிலையிலேயே குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டம், வன உரிமைச் சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன என்றார். வெளியிலிருந்து ஆதரவு இருந்தபோதே இத்தகைய சட்டங்களைக் கொண்டுவர முடிந்தது என்றால், ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவர முடியும் என்பதை உணர வேண்டும் என்றார்.

வங்கிகளில் கடன் கொடுக்கும் நிலையிலிருந்து, வங்கிகளையே பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கும் அளவுக்கு மோடி அரசு சென்றுவிட்டதாகவும், வெண்ணெயை முதலாளிகளுக்கும் சுண்ணாம்பை உழைக்கும் மக்களுக்கும் வைக்கும் அரசாங்கமாக அது உள்ளதாகவும் விமர்சித்தார்.

13.5 கோடி பேரின் வாக்குரிமைப் பறிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையரும், மோடியும், அமித் ஷாவும் கூட்டுச் சதி செய்து 13.5 கோடி மக்களின் வாக்குரிமையைப் பறித்திருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், இரண்டரை கோடி பேர்இறந்திருந்தாலும் மீதி 11 கோடி பேரின் வாக்குரிமை என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பினார்.

ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்காதவர்களின் வாக்குகளே பறிக்கப்பட்டுஉள்ளன; கிட்டத்தட்ட ஆறு கோடி இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது; எந்த அடிப்படையில் எனக் கேட்டால் அது ‘தொழில் ரகசியம்’ என்கிறார்கள் என்றார். வாக்குரிமையைக் காக்க இளைஞர்கள் போராடுவதையும், தில்லி இளைஞர் போராட்டத்தைக் காவல்துறையை வைத்து ஒடுக்கினாலும் அதை மீறி அவர்கள் போராடுவதையும், எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்ட வாக்குகளை மீட்கவும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகவும் வலியுறுத்துவதையும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் போராட நான்கே இடங்கள் ஒதுக்கப்படுவதையும் அவர் கண்டித்தார்.

தவெக அரசின் வாக்குறுதிகள்100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக தமிழக அரசு கூறுவதை மேற்கோள் காட்டிய பெ.சண்முகம், தற்போதைய 25 நாள் வேலைக்கே நிதி ஒதுக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். பேருந்தில் பெண்களுக்கு இலவசம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் என தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும்போது பயனாளர் எண்ணிக்கை குறைக்கப்படுவதையும், தவெக அரசின் வாக்குறுதிகளும் அவ்வாறேசெயல்படுத்தப்படும் நிலையையும் சுட்டிக்காட்டினார்.

தாம் முதலமைச்சரைச் சந்தித்தபோது, தமது ஆட்சியில் போராட வேண்டிய தேவை இருக்காது என அவர் கூறியதாகவும், ஆனால் அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு முழு திருப்தி இல்லாததால் தினமும் போராடி வருவதாகவும் தெரிவித்தார். நமக்கான தேவைகளை அறிந்து,கிராமம்தோறும் சங்கத்தை அமைத்து, நமக்கான பலன்களை நாம்தான் போராடிப் பெற வேண்டும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.