தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘அதிமுகவினரின் வாக்குரிமை பறிப்புக்கு  துணைபோகும் எடப்பாடி பழனிசாமி’ பெ.சண்முகம் குற்றச்சாட்டு

18 Nov 2025, 3:21 pm
‘அதிமுகவினரின் வாக்குரிமை பறிப்புக்கு  துணைபோகும் எடப்பாடி பழனிசாமி’ பெ.சண்முகம் குற்றச்சாட்டு
<p><strong>&lsquo;அதிமுகவினரின் வாக்குரிமை பறிப்புக்கு &nbsp;துணைபோகும் எடப்பாடி பழனிசாமி&rsquo; பெ.சண்முகம் குற்றச்சாட்டு </strong></p> <p>சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியின் எஸ்ஐஆர் ஆதரவை விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், &nbsp;தமது &lsquo;எக்ஸ்&rsquo; பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். &nbsp;அதில், &ldquo;அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களே! திமுக எதிர்ப்பு அல்லது பாஜக ஆதரவு என்பதற்காக, உங்கள் கட்சிக்காரர்களின் வாக்குரிமையை பறிக்க எஸ்.ஐ.ஆருக்குத் துணை போகாதீர்கள்&rdquo; என்று கூறி யுள்ளார். &ldquo;தேர்தல் கூட்டணி அவ்வப்போது மாறலாம். ஆனால், மக்களுக்கு வாக்குரிமை என்பது நிரந்தரமானது. அதைப் பாதுகாப்பது தான் கட்சிகளின் இன்றைய உடனடி &nbsp;கடமை!&rdquo; எனவும் தெரிவித்துள்ளார். மேலும், &ldquo;வாக்குரிமையை விட்டுத்தர மாட்டோம்; பாஜகவை தமிழ்நாடு நிராகரிப்பது உறுதி; தேர்தல் ஆணை யமே, அவசர கதியிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர &nbsp;திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்து!&rdquo; என்றும் பெ. &nbsp;சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.