கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் போராட்டங்களின் தேவை! - பி.சாய்நாத்
11 Jul 2026, 10:02 pm

கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் போராட்டங்களின் தேவை! - பி.சாய்நாத்

இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 18% ஆகும். நீர் வளங்கள் உலக நீர் வளங்களில் வெறும் 4 சதம் மட்டுமே. காலநிலை மாற்றம் மழைப்பொழிவில் என்ன பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவிலும் தென்மேற்குப் பருவமழையின் கீழ்வரும் பிற பகுதி களிலும் விவசாயிகளின் விதைப்புப் பணி ஒன்றரை மாதங்கள் தாமதமாகி உள்ளது. ஜூன் 10-க்குள் எப்போதும் முதல் விதைப்பைச் செய்த விவசாயிகளுக்கு அது முழுமையான மொத்த இழப்பா கும். அவர்கள் மீண்டும் விதைத்தால் முதலீட்டுச் செலவு இரு மடங்காகும்.

எல் நினோ காரணி மோசமடையும் சூழலில், 60 கோடி இந்தியர்கள் ஏற்கெ னவே மிதமானது முதல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் வாழ்ந்து வரும் நிலை மேலும் மோசமடையும். குறிப்பாகப் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் போன்ற மாவட்டங்க ளில் அதிக தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் வேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. கொல்லைப் புற வழியாகத் தனியார் ஆழ்துளைக் கிண றுகள் என்பது தண்ணீரைத் தனியாருக்கு மாற்றுவதுதான்.

நீங்கள் எதிர்கொண்ட கோகோகோ லா, பெப்சிக்கு எதிரான போராட்டங்கள் கேரளாவின் பிளாச்சிமடா, ராஜஸ்தான், வாரணாசி உட்பட பல போராட்டங்கள் இடதுசாரிகள் தலைமையில்தான் நடந்தது. அந்தப் போராட்டங்களில் இருந்த தண்ணீர் பிரச்சனை நாம் சந்திக்கப் போகிற எல் நினோவின் மிகப்பெரிய பாதிப்பில் 10-இல் ஒரு பங்குகூட இல்லை. எனவே இதற்கு எதிரான போராட்டத் திற்குத் தயாராக இருக்க வேண்டும்.

தரவு மையங்கள் அனைத்தும் ஏன் இந்தியாவிற்கு வருகின்றன?

தமிழகத்தில் தரவு மையங்களின் செயல்பாடுகளால் டெல்டா பகுதியில் கிராமப்புறப் பகுதிகளில்தான் சவால்க ளும் பாதிப்புகளும் அதிகம் நிறைந்தி ருக்கிறது. சாதாரண கணினிமயமாக் கப்பட்ட டிஜிட்டல் தரவு மையங்கள் மற்றும் ஏஐ தரவு மையங்கள் என இரண்டு வகையான தரவு மையங்கள் செயல்படுகின்றன. நவீன தொழில்துறை யில் ஏஐ போல வேறெந்தக் கருவியும் தண்ணீர், நிலம் மற்றும் மின்சாரத்தை இவ்வளவு பயன்படுத்தியது கிடையாது. ஒரு நடுத்தர அளவிலான தரவு மையம் ஒரு சிறிய நகரத்திற்கு இணையான மின்சாரத்தையும் தண்ணீரையும் பயன் படுத்துவது போல, பெரிய மையங்கள் குறைந்தபட்சம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வீடுகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் மின்சாரத்தைப் பயன் படுத்துகின்றன.

இதுபோன்ற பிரச்சனைகள் ஒடுக்கப் பட்டவர்கள் இருக்கும் பகுதியில்தான் வரப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை. உலகத் தரவுகளில் 20 சத வீதத்தை இந்தியா உற்பத்தி செய்கி றது. ஆனால் இந்தத் தரவுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அமெ ரிக்காவில் நூற்றுக்கணக்கான நகரங்கள் தரவு மையங்களைத் தடை செய்துள் ளன. கலிபோர்னியா, ஒரேகான், ஓகியோ, நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்கள் தரவு மையங்க ளைத் தடை செய்து, தரவு மையம் வரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் பயன்பாட்டிற்கும் மக்களின் பயன்பாட்டிற்கும் வித்தியாசம் அதிகம். பெரிய அளவிலான தரவு மையங்களுக்குப் பெருமளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. அவற்று க்கு மிகப்பெரிய நிலப்பரப்புகளும் பெரிய அளவிலான தண்ணீரும் தேவைப் படுகிறது. சாதாரண தரவு மையங்களை விட ஏஐ தரவு மையங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சிப்கள் தேவைப்படு கின்றன. மிகவும் சக்தி வாய்ந்த சிப்கள் என்றால் அதிக வெப்பத்தை உருவாக்கு வது என்று அர்த்தம். சிப் பெரிதாக இருக்கும் போது அதன் திறன் அதிகமாக இருக்கும். மாபெரும் ஹைப்பர் ஸ்கேல் ஏஐ தரவு மையங்களில் ஏஐ சிப்கள் மிகப்பெரிய வெப்பத்தை உருவாக்கும். அதன் காரணமாகச் சாதாரண தரவு மையங்களை விடக் குளிர்விப்பதற்குப் பெரும் அளவிலான தண்ணீர் தேவைப் படும்.

கடந்த ஆண்டு அரசு அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்தியாவில் தரவு மையங்கள் மிகக் குறைவான எண்ணிக் கையில் உள்ளன. உலகில் தற்போதைய தரவு மையங்களால் ஒரு டிரில்லியன் (1லட்சம் கோடி) லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள தரவு மையங்கள் 15 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீரை குடித்துள்ளன. இது 2025 ஆம் ஆண்டின் இறுதிவரை கணக்கு. இனிவரும் அடுத்த நான்கு ஆண்டுக ளில் இந்த நிலை இரட்டிப்பாகும். அரசாங்கத்தின் கணிப்புப்படி 2030-க்குள் தண்ணீரின் அளவு 30,000 கோடி லிட்டராக இருக்கும். இதனால் ஒட்டு மொத்தக் குடிநீர் விநியோகமும் போய் விடும். அதனால்தான் அமெரிக்கர்கள் தரவு மையங்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் அனைத்து அபாயகரமான, மோசமான, அதிக தேவை கொண்ட தொழில்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்புகின்றன. சிகரெட்டுகளிலும் இதுதான் நடக்கிறது. உலகில் சிகரெட் பயன்பாட்டிற்கான மிகப்பெரிய சந்தை கள் இந்தியாவும் ஆசிய நாடுகளும்தான். மேற்குலகில் அவை அப்படி இல்லை. அவற்றிற்கு எதிராக அவர்கள் அனை த்து வகையான கடுமையான சட்டங்க ளையும் வைத்துள்ளனர். பொது இடங்க ளில் புகை பிடிப்பதைத் தடை செய்வதில் இந்தியா 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. இதற்குக் கார ணம் நம் சட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. பல நாடுகளில் தடை செய்யப் பட்ட மருந்துகளை, பூச்சிக்கொல்லி களை நாம் இந்தியாவில் பயன்படுத்து கிறோம்.

பில்லியன் டாலர் முதலீடுகளும் நிலப்பறிப்பும்

2026 முதல் 2030 வரை முதலீட்டின் அளவு, மைக்ரோசாப்ட் ஏற்கெனவே மூன்று பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களை இந்தியாவில் தரவு மையங்களில் முதலீடு செய்திருக்கிறது. 2030-க்குள் அதன் திட்டமிடப்பட்ட முதலீடு இன்னும் 17.5 பில்லியன் டாலர் கள் ஆகும். அமேசான் 35 பில்லியன் டாலர், கூகுள் 20.5 பில்லியன் டாலர் ஆக மொத்தம் 55 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளன. கூகுள் மற்றும் மெட்டா ஒரே ஒரு மையத்தில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. இது அமெரிக்காவிற்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய தரவு மையமாகும்.

அமெரிக்காவிற்கு வெளியே கட்டப் படும் மிகப்பெரிய தரவு மையம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம். இதற்காக அவர்கள் ஏற்கெனவே நிறைய நிலங்களைக் கைப்பற்றியுள்ளனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னரே கையெழுத்தானது. இதனால் இடம் பெயர வேண்டியிருக்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர் தலித்துகளாவர்.

உலகளாவிய நிலப்பிரபுக்களும் வேலைவாய்ப்பு அழிப்பும்

1960-களில் இடதுசாரிகள் நிலப்பிர புக்களுக்கு எதிராகத் தீவிரமான போ ராட்டத்தை நடத்தினர். கார்ப்பரேட்டு கள்தான் இன்றைய மாபெரும் உலக ளாவிய நிலப்பிரபுக்கள். இன்று உலகில் நடக்கும் மிகப்பெரிய போராட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானதுதான். தரவு மையங்களால் லட்சக்கணக்கான வேலைகள் பறிபோகப் போகின்றது. ‘பீப்பிள்ஸ் ஆர்க்கிவ் ஆஃப் ரூரல் இந்தியா’ (PARI) என்ற இணையதளம் தமிழ் உட்பட 15 மொழிகளில் தினமும் இது குறித்த செய்திகளை வெளியிடு கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தி யன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்க ளின் வேலையை ஏஐ பறித்துக் கொண்டி ருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு எதி ராக நடக்கும் இந்த அழிவு ‘ஜெர்னோ சைட்’ (Journocide) என அழைக்கப் படுகிறது.

இது குறித்து கோவிட் தொடக்கத்தில் எஸ்.கே.பாண்டே தலைமையிலான தில்லி பத்திரிகையாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. கோவிட் காலத்தின் 15 மாதங்க ளில் முக்கிய ஊடக நிறுவனங்கள் 3,500 பத்திரிகையாளர்களையும், கேமரா மேன்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 15,000 பத்திரிகையாளர்கள் அல்லாத ஊடக ஊழியர்களையும் வேலைநீக்கம் செய்தன. இந்திய வர லாற்றிலேயே முதன்முறையாகப் பிரத மர் மோடி ஊடகங்களையும் பத்திரிகை யையும் அத்தியாவசிய சேவை என்று அறிவித்த பிறகும் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு விஷயம் அத்தி யாவசிய சேவை என்று அழைக்கப்படும் போது உங்களால் வேலைநீக்கம் செய்ய முடியாது. நாளைக்கு முழு நகரமும் தீப்பற்றி எரிந்தால் தீயணைப்புப் படையில் 50 சதவீதம் பேரை நீங்கள் வேலைநீக்கம் செய்வீர்களா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல ஐடி துறையிலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை முன் அறிவிப்பின்றி திடீரென வேலையை விட்டு நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஏஐ அவர்கள் செய்கிற வேலை அனைத்தை யும் செய்கிறது. இதனால் கீழ்மட்டம் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

அறிவுச் சொத்து திருட்டும் தண்ணீரில் சமத்துவமின்மையும்

பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக மனிதகுலத்தின் அனைத்து அறிவுச் சொத்தையும் ஒரே நபரிடம் லாப நோக்கத்திற்காக ஒப்படைப்பது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சொத்து சில பில்லியனர்களின் லாபத்திற்காகப் பயன்படுகிறது. அவர்களில் ஒருவர்தான் எலான் மஸ்க். இவர் பெரும் டிரில்லிய னராக மாறியுள்ளார். ஒட்டுமொத்த மனித இனத்தின் அறிவுச் சொத்தை வெறும் ஐந்து பேர் மட்டுமே சொந்த மாக்கிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஏஐ வருகையால் பிஎச்டி படித்தவர்கள் கூடத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். இதன் காரண மாக கூகுள், மெட்டா, ஓப்பன் ஏஐ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கப் பெடரல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் தண்ணீருக்கான உரிமை பற்றிய ஒட்டுமொத்தப் பிரச்ச னையையும் ஆழமாகப் பார்க்க வேண்டும். தண்ணீரில் உள்ள சாதி காரணியையும் பாலினக்காரணியையும் நாம் கவனிக்கவில்லை எனில் அது பேராபத்து. ஏழை கிராமப்புறப் பெண்கள் நாட்டின் தண்ணீர் சேகரிப்பில் 80 சதவீதம் பங்களிப்பைச் செய்கின்றனர். ஆனால் தண்ணீர் பயன்பாடு முற்றிலும் தலைகீழாக உள்ளது. அதில் 60 சதவீதம் நகர்ப்புறங்களில்தான் பயன்படுகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கும், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழக்கூடிய தலித் மக்களுக்குமான தண்ணீர் பயன்பாட்டில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தில் நீரின் பங்கு மிக முக்கி யமானது. தண்ணீரைச் சேகரிக்கும் பழங்குடியினப் பெண்கள் தண்ணீர், விறகு, எரிபொருள், தீவனம் ஆகிய வற்றை எடுக்க நீண்ட தூரம் நடக்கி றார்கள்.

இந்தியாவில் தண்ணீர் ஏழையி லிருந்து பணக்காரருக்கு, விவசாயத்தி லிருந்து தொழில்துறைக்கு, கிரா மப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு, வாழ்வாதாரத்திலிருந்து ஆடம்பரத்திற்கு உட்பட ஆறு வகைகளில் இடமாற்றம் அடைகிறது. மேலும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து உயர்சாதிப் பகுதிகளுக்குத் தண்ணீர் இடமாற்றம். உதாரணமாக, மகாராஷ்டிராவில் தானே, பால்கர், நாசிக் ஆகிய மாவட்டங்க ளில் உள்ள ஆறுகள், ஏரிகளில் இருந்து தான் மும்பை மாநகராட்சிக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் குடிநீர் எடுக்கப்படும் இந்த மாவட்டங்களில் குழாய் தண்ணீர் உள்ள ஒரு வீட்டைக்கூட நம்மால் காண முடியாது. இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இடை யேயான பிரச்சனையில் முதல் இடத்தில் இருப்பது தண்ணீரைப் பற்றியதுதான். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, கேரளாவுடன் முல்லைப்பெரியாறு. இப்படி நதிகளின் நீர் பகிர்வு தீவிரமான பிரச்சனையாக இருக்கிறது.

மறுபுறம், 1991-இல் புதிய பொருளா தாரக் கொள்கைகளை இந்திய அரசு கொண்டு வந்த போது இந்தியாவில் ஒரு டாலர் பில்லியனர்கூட இல்லை. ஆனால் தற்போது 226 டாலர் பில்லியனர்கள் உள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை என்பது உலகளாவிய முதலாளித்துவத்தின் பைபிளாகும். இது உலகின் பில்லிய னர்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்தி யாவின் 226 டாலர் பில்லியனர்களின் மொத்த சொத்து 1.024 டிரில்லியன் டாலர்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கைப் போல கிட்டத்தட்ட வசதியா னவர்கள். இந்த 226 டாலர் பில்லிய னர்கள் இந்தியாவின் ஜிடிபியில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். இந்த அளவிலான சமத்துவமின்மை இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை.

கார்ப்பரேட் கொள்கைகளும் எளிய மக்களின் நெருக்கடியும்

ஈரான் போரின் தாக்கம் பற்றி, டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரையா ளர் சுவாமிநாதன் அய்யர் “இந்தியா எல்பிஜி நெருக்கடியை அற்புதமாகக் கையாண்டுள்ளது” என்று எழுதினார். சென்னையில் தாம்பரம் போன்ற பகுதிகளில் கட்டுமானப் பணியில் பீகாரைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து மாதம் 30,000 சம்பாதித்துக் கொண்டி ருந்தனர். இந்நிலையில் எல்பிஜி நெருக்கடியின் காரணமாகச் சமைத்துச் சாப்பிட முடியாமல், உணவகங்களில் விலை உயர்வு காரணமாக இறுதியாக வேலையை விட்டுச் சொந்த ஊருக்கே திரும்பி, வயல்களில் வேலை செய்து ஒரு நாளைக்கு ரூபாய் 200 சம்பாதிக்கி றார்கள். இப்படித்தான் இந்தியா எல்பிஜி நெருக்கடியை ‘‘அற்புதமாகக்” கையாண்டுள்ளது, ஏழையின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியை உருவாக்கிவிட்டது.

மகாராஷ்டிராவில் சாங்வி என்ற கிராமம் உள்ளது. வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த எட்டு - பத்து ஆண்டுகளில் வறுமையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டது. மூன்று லாரி ஓட்டுநர்கள் ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கி, நான்கு லாரிகள் வாங்கிச் சுதந்திரமான நிறுவனமாகச் செயல்படத் தொடங்கினர். பெரிய தளவாட நிறுவ னங்களின் விலையில் பாதியை விடக் குறைவு. அடுத்தகட்டமாகப் பெரிய தளவாட நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்கத் தொடங்கின. பின்னர் இந்த மூன்று மனிதர்களின் முயற்சியால் ஈர்க்கப்பட்ட கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கடன் பெற்றனர்; கடனுக்கான உத்தரவா தத்தையும் அளித்தனர். கிராமத்தில் உள்ள 80 ஆண்களும் லாரிகளையும் கொள்கலன்களையும் வாங்கினர். இது மராத்வாடாவின் மிகப்பெரிய தளவாட மையமாக மாறியது. திடீரென்று டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது. 400 லாரிக ளில் பாதிக்கு மேலானவை டீசல் இல்லா மல், வாங்கவும் இயலாமல் மாநிலம் முழு வதும் முடங்கிக் கிடக்கின்றன. கிராமமே மீண்டும் வறுமையில் வீழ்ந்துள்ளது.

இடதுசாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விவசாயிகள் போராட்டம்

இத்தகைய மோசமான சூழல்களில் தான், எளிய மக்களின் போராட்டங்கள் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன. விவ சாயிகளின் தற்போதைய ஒட்டுமொத்தப் போராட்டங்களும் 2018-இல் மகாராஷ்டிரா வில் தொடங்கியது. காலணிகூட இல்லாத 40,000 ஏழ்மையான விவசாயி கள், ஆதிவாசிகள் நாசிக்கில் இருந்து மும்பை வரை 182 கி.மீ தூரம் ஆறு நாட்கள் நடந்து ஒரு பேரணியை மேற் கொண்டு, அவர்கள் விவசாயப் போராட்ட உலகத்தை மாற்றினர். 2020-இல் எழுந்த போராட்டங்கள் நாசிக்கில் இருந்து மும்பை வரை விவசாயிகள் சங்கத்தின் பேரணியால் மிகவும் ஈர்க்கப்பட்டவை.

இதைச் செய்ய முடியும் என மக்கள் நமக்குச் சாத்தியக்கூறுகளைக் காட்டுகிறார்கள். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக அதில் பங்கேற்ற பெண் விவசாயிகளின் பங்கேற்பு இருந்தது; அவர்களே அந்தப் போராட்டத்தை வழிநடத்தினர். பெண்கள் பங்கேற்பு இல்லாத எந்தப் போராட்டமும் வெற்றி அடைந்திருக்க முடியாது. அவர்கள் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே ஒற்றுமையை உருவாக்கி ஒருங்கிணைத்தனர். பஞ்சாப்பின் மிகப்பெரிய விவசாயச் சங்கங்கள் அங்கே இருந்தன.

ஒற்றுமையை உருவாக்கி ஒருங்கி ணைத்துப் போராடுங்கள், அவைதான் நமக்கு முன் உள்ள சவால்கள். விவ சாயிகள், ஆதிவாசிகள் நடத்திய போ ராட்டத்தைப் போல் நம்மால் நிச்சய மாக வெல்ல முடியும்.

(சென்னையில் பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற “திருப்பி அடித்த வரலாறு” நூல் கருத்தாய்வு அரங்கில் ஆற்றிய உரையின் பகுதிகள்) தொகுப்பு : கே.ஆர்.பாலாஜி