மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து ப.லட்சுமணன் பிரச்சாரம்
1 Oct 2026, 10:58 pm

மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து ப.லட்சுமணன் பிரச்சாரம்

தாராபுரம், அக். 1 -தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் ப. லட்சுமணன் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிந்து எளிமையான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

தொகுதி மக்களின் முக்கியத் தேவைகளில் ஒன்றான குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்து, தாராபுரம் தொகுதி முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன் எனப் பொதுமக்களிடம் உறுதியளித்து வருகிறார். ஆடம்பரமான பிரச்சாரங்களைத் தவிர்த்து, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரிப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அக்டோபர் 6 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடிநீர், விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனை களை முன்வைத்து இடதுசாரிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் ப.லட்சுமணன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.