சமூக விழிப்புணர்வைப் பரவலாக்குவோம்.. அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் உறுதி ஏற்பு
3 Jun 2026, 11:32 pm
<p><strong>சமூக விழிப்புணர்வைப் பரவலாக்குவோம்.. அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் உறுதி ஏற்பு</strong></p><p>சென்னை, ஜூன் 3- “அறிவியல் சிந்தனை களைச் சிறார்களிடம் கொண்டு சேர்ப்போம்; காப்பீட்டுப் பாதுகாப்பின் நன்மைகளைச் சமூகத்தில் விளக்குவோம்” என்ற லட்சி யங்களை முன்வைத்து, மறைந்த களப்பணியாளர் பி.கிருஷ்ணமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. அவரது குடும்பத்தினர், காப்பீட்டு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் இணைந்து இந்நாளை ஒருங்கிணைத் தனர். நிகழ்ச்சியில், தமுஎகச மேடைப் பாடல்களை இசைப் பாடகர் இளங்கோ பாடினார். தொடர்ந்து, இரு தய நோய் நிபுணர் மருத்து வர் கே.ஜெய்சங்கர் பங்கேற்று, இருதய நோய் தடுப்பு உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி குறித்துப் பேசி, மக்களின் கேள்விகளுக்கு விளக்க மளித்தார். காப்பீட்டு விழிப்பு ணர்வு குறித்து கே.மகேந்தி ரன், ஆர்.சங்கீத வீணா, ஆர். சர்வ மங்களா, ஜி.ஆனந்த் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் ஒரு பகுதியாகக் கண் மருத்துவ முகாமும் நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க வட சென்னை மாவட்டச் சார்பில் பி.கிருஷ்ணமூர்த்தி நினை வாகத் தொகுக்கப்பட்ட அறி வியல் கட்டுரைப் புத்த கத்தை மாவட்டச் செயலா ளர் அரவிந்த் வெளியிட, கிருஷ்ணமூர்த்தியின் இணையர் பிரேமா, மகன் சந்திரசேகர், மகள் மைதிலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கடந்த ஆண்டு மே 31 அன்று மறைந்த பி.கிருஷ் ணமூர்த்தி (79), இளவயது முதலே மார்க்சிய சிந்த னையால் ஈர்க்கப்பட்டு, சிறார்களிடம் அறிவியல் விழிப்புணர்வு ஊட்டியவர். அவரது மறைவுக்குப் பின், குடும்பத்தினர் அவரது உடலை மருத்துவ ஆராய் ச்சிக்கு ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பி.கிருஷ்ண மூர்த்தியின் நினைவுகளை ரயில்வே ஊழியர் இயக்க மூத்த தலைவர் ஆர்.இளங் கோவன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி குணசேகரன், சிபிஎம் மத்திய சென்னை செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, எஸ்.வி.வேணு கோபாலன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். நிறை வாக, பிரேமா அறிவியல் இயக்கப் பாடல் இசைக்க, குடும்பத்தினர் நன்றி கூறினர். காப்பீட்டு ஊழியர் சங்க மத்திய நிர்வாகி ஜி.ஆனந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தொகுப்பு: </p>
