தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லேடி வெலிங்டன் பள்ளிக்குச் சிங்காரவேலர் பெயரைச் சூட்ட மறுப்பது வருத்தமளிக்கிறது நொச்சிக்குப்பம் கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு

21 Feb 2026, 4:39 pm
லேடி வெலிங்டன் பள்ளிக்குச் சிங்காரவேலர்  பெயரைச் சூட்ட மறுப்பது வருத்தமளிக்கிறது  நொச்சிக்குப்பம் கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு
<p><strong>லேடி வெலிங்டன் பள்ளிக்குச் சிங்காரவேலர் &nbsp;பெயரைச் சூட்ட மறுப்பது வருத்தமளிக்கிறது &nbsp;நொச்சிக்குப்பம் கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு</strong></p> <p>சென்னை, பிப். 21: லேடி வெலிங்டன் பள்ளிக்குச் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயர் சூட்ட &nbsp;அரசு மறுப்பது வருத்த மளிக்கிறது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 166-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வெள்ளியன்று (பிப். 20) நொச்சிக்குப்பத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் மக்களி டம் வசூலிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயைப் பகுதிக் குழு உறுப்பினர் ஜெயச் சந்திரன், மாநிலச் செய லாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினார். அந்த நிதியைப் பெற்றுக்கொண்டு அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: நொச்சிக்குப்பம் லூப் சாலைக்கு &lsquo;சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை&rsquo; எனப் பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. அதற்குத் தமிழக அரசு உடனடியாக ஒப்புதலை வழங்கி, விரைந்து பெயர் பலகையைத் திறக்க வேண்டும். மக்களின் ஒற்றுமை, மதச்சார்பின்மை க்காகப் பாடுபட்டவர் சிங்காரவேலர். இதற்கு நேர் திரானது பாஜக. ஆனால், தேர்தல் வருவதால் பாஜக மாநிலத் தலைமை அலு வலகத்தில் சிங்காரவேலர் பிறந்தநாளுக்குப் பேனர் &nbsp;வைக்கின்றனர். சிங்கார வேலருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம்? சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் நிலத்தை அபக ரித்து ஆங்கிலேயே அரசு லேடி வெலிங்டன் பள்ளியை &nbsp;உருவாக்கியது. அந்தப் பள்ளிக்குச் சிங்காரவேலர் பெயர் சூட்டக் கோரி வரு கிறோம். அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து, காலம் கடத்தி வருவது வருத்தமளிக்கிறது. இளைஞர் சக்தி வீணடிப்பு: 365 நாட்களும் மக்கள் நலனுக்காக ஆயிரக்கண க்கான தோழர்கள் போராடி க்கொண்டிருக்கிறோம். தவெகவில் உள்ளவர்களே காதல் திருமணம் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத்தான் வருகிறார்கள். உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத் திரமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. தவெக தலைவர் விஜய், முதல்வரானால் இதை அதைச் செய்வேன் என்று பேசுகிறார். அவர் மாநாடு நடத்தினாலே ஒரு சாவு உறுதி என்ற நிலை உள்ளது. விக்கிரவாண்டி தொடங்கி சேலம் கூட்டம் வரை சாவு நிகழ்ந்துள்ளது. தன்னைப் பற்றியே பேச வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது. தனியார் பல்கலைக் கழகத் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது. அதனை யேற்று அதை நிறுத்தி வைத்தது. தற்போது அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கி றோம். இதுபோன்று எதைப் பற்றியுமே கருத்து சொல்லாதவராக விஜய் உள்ளார். நாட்டை நாச மாக்கும் கொள்கைகளை அமலாக்கும் ஒன்றிய அரசைப் பற்றி கூட எதுவுமே &nbsp;பேச மறுக்கிறார். சினிமா மாதிரியே யாரோ இயக்க, யாரோ நடிக்க என்பது போல அந்த கட்சி உள்ளது. இளைஞர் சக்தியை வீணடி ப்பதை கண்டு மார்க்சிஸ்ட் கட்சி வருந்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசு கையில், &ldquo;நீலக்கொடி திட்டம், ரோப் கார் திட்டம் உள்ளிட்டவைகளின் வாயி லாகக் கடற்கரையைத் தனி யாருக்குக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது. மாநகராட்சியின் பட்ஜெட் சரி யான திசையில் இல்லை. 10 பேருந்து நிலையங்களைச் சீரமைத்துக் கட்டும் திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்த வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக் கீட்டை அதிகரிக்க வேண்டும்&rdquo; என்றார். &ldquo;சென்னை நகரம் முழு வதும் உள்ள மக்களுக்குக் குடிமனைப் பட்டா கேட்டு கடந்தாண்டு டிசம்பர் 16-ந் தேதி மார்க்சிஸ்ட் கட்சி &nbsp;மாபெரும் இயக்கத்தை நடத்தியது. இதனை யடுத்துப் பட்டா வழங்குவது, அறநிலையத்துறை வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான பல்வேறு அர சாணைகளை வெளியிட் டுள்ளதை வரவேற்கிறோம். நொச்சிக்குப்பம் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களுக் கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும்&rdquo; என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்திற்கு மயிலாப்பூர் பகுதிச் செய லாளர் ஐ.ஆர்.ரவி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.அன்பு ரோஸ் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எஸ்.குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். ஜெயசங்கரன், எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பி னர் எஸ்.விஜயா ஆகியோர் பேசினர். பகுதிக்குழு உறுப் பினர் எஸ்.மகேஷ் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.