நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒரு சதி ப. சிதம்பரம் கடும் கண்டனம்!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒரு சதி ப. சிதம்பரம் கடும் கண்டனம்!</strong></p>
<p>சென்னை, ஏப்.4 - நாடாளுமன்றத் தொகுதிகளின் எண் ணிக்கையை 816 ஆக உயர்த்தும் மசோதாவை நிறை வேற்ற, ஏப்ரல் 16 முதல் 18 வரை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர் களிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடை பெறும் சூழலில் இந்தச் சிறப்புக் கூட்டத் தைக் கூட்டுவது ஒரு திட்டமிட்டச் சதி. தமிழ்நாட்டில் 39, மேற்கு வங்கத்தில் 28 என மொத்தம் 67 எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் தேர்தல் பணிகளில் இருப்பதால், அவர்கள் அவைக்கு வர இயலாத நிலையை உருவாக்கி மசோதாவை நிறைவேற்ற அரசு முயல்கிறது. இது அரசியல் சாசன ரீதியி லான மோசடி” என்று சாடினார். தொகுதிகள் மறுவரையறை செய்யப் பட்டால் தென் மாநிலங்களின் நாடாளு மன்றப் பிரதிநிதித்துவம் மேலும் குறையும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தி னார். எனவே, தேர்தல்கள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ப. சிதம்பரம், ஜனநாயகப் பண்புகளுக்கு எதி ரான இந்த அவசர நடவடிக்கையைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.</p>
