ஒழலூர் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பள்ளி கட்ட முயற்சி நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் மனு!
30 Oct 2026, 11:50 pm

ஒழலூர் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பள்ளி கட்ட முயற்சி நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் மனு!

செங்கல்பட்டு, அக். 30-செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் கிராமத்தில் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மாவட்டநிர்வாகத்தின் உத்தரவை மீறி தனியார் பள்ளி கட்ட முயற்சிப்பதற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம்மனு அளித்துள்ளன.

ஒழலூர் ஏரி நீரைப் பயன்படுத்தி புதுப்பாக்கம், ஒத்திவாக்கம், ஒழலூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 750 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த 2015 முதல் ஏரியை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக்க முயன்ற நிலமாஃபியாக்களுக்கு எதிராகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களால், அப்போதைய ஆட்சியர் உத்தரவுப்படி அவ்விடம் ‘ஏரிநீர் மூழ்கடை’ பகுதி என அரசுப் பதிவேட்டில் மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவை மீறி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் கனரக இயந்திரங்கள் மூலம் தனியார் பள்ளி கட்டுவதற்கான அடித்தளப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்கிராம பொதுமக்கள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டவருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஏரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பட்டாக்களைரத்து செய்து, விவசாயத்தையும் ஏரியையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. வாசுதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிசெயலாளர் கே. வேலன் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.