ஓசம்பிக், வெகோவி மருந்துகளால் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் – அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம்
3 hours before
<p>ஓசம்பிக், வெகோவி மருந்துகளால் கண் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.</p><p>நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையை குறைக்கப் பயன்படுத்தப்படும் ஓசம்பிக் (Ozempic), வெகோவி (Wegovy), மவுன்ஜாரோ (Mounjaro), செபவுண்ட் (Zepbound) உள்ளிட்ட மருந்துகளால் கண் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக புதிய எச்சரிக்கையைச் சேர்க்க மருந்து தயாரிப்பு நிறுவங்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதால், பார்வை நரம்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, திடீர் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய 'நான்-ஆர்டெரிடிக் ஆன்டீரியர் இஸ்கெமிக் ஆப்டிக் நியூரோபதி' (NAION) எனப்படும் அரிய வகைக் கண் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து GLP-1 வகை மருந்துகளின் லேபிள்களிலும் 'எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்' என்ற பிரிவில் இந்தப் பாதிப்பு குறித்த தகவல்களைச் சேர்க்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p>
