விவசாயக் கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி
22 Feb 2026, 3:26 pm
<p><strong>விவசாயக் கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி</strong></p>
<p>சேலம், பிப்.22- சேலம் குரங்குச்சாவடி அருகே விவசாய நிலத் தில் டிராக்டர் மூலம் கல் ஏற்றிச் சென்றபோது, எதிர் பாராத விதமாக கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரி ழந்தார். சேலம் குரங்குச்சாவடி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (53). இவர், அப்பகுதியில் இரும்பு கிரில் பட்டறை நடத்தி வந்ததுடன், சொந்த நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். ஞாயிறன்று காலை, தனது விவசாய கிணற்றிற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, டிராக்டரில் கற்களை ஏற்றிக் கொண்டு கிணற்றின் அருகே சென்றுள்ளார். அப் போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலைதடு மாறி, கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிராக்ட ருக்கு அடியில் சிக்கிய வெங்கடேசன், தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் மற் றும் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றுக்குள் மூழ்கியிருந்த டிராக்டர் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. விபத்து குறித்து தகவல றிந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து மீட்புப் ப ணிகளை பார்வையிட்டார். உயிரிழந்த வெங்கடேச னின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயக் கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.</p>
